“தமிழ் மக்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே என்று அவர்களின் உறவுகள் கதறுகின்றார்கள். எனவே, இந்த உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை, பொதுமக்களைக் காரணமின்றிக் கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா, யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு […]
Other News
சர்வதேச விசாரணைக்கு சூத்திரதாரி மஹிந்தவே! – பான் கீ மூனை அழைத்துவந்து இணங்கியவர் அவரே என்கிறார் பொன்சேகா
“போர் முடிந்த சூட்டோடு முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி – மூனை இலங்கைக்கு அழைத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த இணங்கிய மஹிந்த, இராணுவத்தைக் காட்டிக் கொடுப்பதாக இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.” – இவ்வாறு அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:- […]
கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நாவில் மறுக்கவில்லை அரசு! – வாசு குற்றச்சாட்டு
“கலப்பு நீதிமன்றத்தையும் வெளிநாட்டு நீதிபதிகளையும் ஏற்கப்போவதில்லை என்று அரசு ஒருபோதும் ஜெனிவாவில் கூறவில்லை. இங்கு மாத்திரமே இவ்வாறான கருத்துக்களை அரசு வெளியிடுகின்றது. தேசிய அரசின் இரட்டை முகத்தை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “அமெரிக்கா […]
முழுமையான தீர்வை தமிழருக்குத் தராது தென்னிலங்கை! – தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் ஹரீஸ்
“தமிழர்களுக்கு முழுமையான தீர்வை தென்னிலங்கை தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதீத நம்பிக்கையில் இருக்கின்றது. கூட்டமைப்பின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில்தான் புதிய அரசமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் கிடைக்கும். எனவே, முழுமையான தீர்வைப்பெற தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் […]
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகாரம்! – கூறுகின்றார் அஜித் பெரேரா
“சமஷ்டிதான் தேவை என்று தமிழர்கள் பிடிவாதமாக இருக்கத் தேவையில்லை. அவர்கள் முழுமையாகத் திருப்தியடையும் வகையில் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்கும் நோக்கிலேயே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. மக்கள் இணங்க முடியாத எதுவும் அதில் இருக்காது. நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதை […]
ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தந்திரோபாய நகர்வு தேவை! – இலங்கையை வலியுறுத்துகின்றது பிரிட்டன்
“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால எல்லையுடனான தந்திரோபாயத்தை இலங்கை உருவாக்க வேண்டும்.” – இவ்வாறு பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பிரதி அமைச்சர் ஜொய்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கையில் ஆயுத மோதல்களின் பாரம்பரியத்துக்குத் தீர்வைக் காண்பதற்காக இன்னமும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பல […]
மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் – போப் பிரான்சிஸ் ஒப்புதல்
மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சிக்கு அருகிலுள்ள புல்லுவழி என்ற ஊரில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார். 1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்டார். 1980-ல் கன்னியாஸ்திரியான இவர், 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற […]
எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா போரை சந்திக்கும் – ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்
முன்பு போல் இல்லாமல் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தியா போர்களை சந்திக்கும் என ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவம் சார்ந்த அறிக்கை தொகுப்பு வெளியீட்டு விழாவில் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது ராணுவ வடிவமைப்பு பிரிவின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் இரண்டாவது தொகுப்புகளை வெளியிட்டு பேசிய அவர் ,” முன்பு போல் இல்லாமல் வரும் காலங்களில் […]
தெலுங்கானா மாநில சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இருந்து சஸ்பெண்ட் – தெலுங்கானா பா.ஜ.க கட்சியினர் கண்டனப் பேரணி
தெலுங்கானா மாநில சட்டசபையில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் இன்று கண்டனப் பேரணி நடத்தினர். தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விகிதத்தை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 5 பேரையும் இரண்டு நாட்கள் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார். சபாநாயகரின் இந்த […]
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் – உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது. மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது. இது பற்றிய ஆய்வை […]





