Tuesday , March 19 2024
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

Head News

டெல்லியில் விவசாயிகள் முற்றுகை பேரணி

டெல்லியில் விவசாயிகள் முற்றுகை பேரணி இன்று மீண்டும் தொடங்குகிறது. அங்கே பதற்றமான சூழ்நிலை இதனால் நிலவுகிறது. மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர். விவசாயிகள் மீது …

Read More »

நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார் மோடி.!

இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், அம்மாநில பாஜக எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ரூ. 15,400 மதிப்பிலான திட்டங்களை …

Read More »

தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

பாஜக தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை கூடியிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதே குழு நேற்று ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்தும் மாநில நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடைபெற்று …

Read More »

வீல் சேர் கிடைக்காததால் பயணி மரணம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

வீல் சேர் கிடைக்காததால், அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது. கடந்த 12ம் தேதி அமெரிக்காவில் இருந்து வயதான முதிய தம்பதி மும்பை வந்தனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வீல்சேர் வசதி தேவை எனக் கூறியிருந்தனர். மும்பை வந்ததும், போதுமான வீல் சேர் இல்லாததால் …

Read More »

டோலி சாய்வாலாவை சந்தித்து அவரது கைவண்ணத்தில் தயாரான டீயை பருகினார் – பில் கேட்ஸ்

இந்தியாவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அப்போது, நாக்பூர் சென்ற அவர் டோலி சாய்வாலாவை சந்தித்து அவரது கைவண்ணத்தில் தயாரான டீயை பருகினார். இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம் என்றும் அதில் ஒன்று இந்த டீ தயாரிப்பு என்றும் பில்கேட்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். பல லட்சம் …

Read More »

காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை எதிர்த்து – மனிதம் கடந்த மனிதாபிமானம்.

காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை எதிர்த்து இஸ்ரேலை கண்டித்து இன்றைய தினம் தீக்குளித்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஆரோன் புஷ்னெல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதம் கடந்த மனிதாபிமானம். அமெரிக்க வொஷிங்டன் இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்னால் தனக்கு தானே தீமூடிட்க்கொண்ட இவர் தீக்குளிக்க முன் கூறியதாவது. நான் செய்யப் போவது பயங்ரகரமான அனுமதிக்க முடியாத செயல் என்று எனக்குத் தெரியும் ஆனாலும் காஸாவில் பச்சிளம் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் நடந்துகொண்டிருப்பது …

Read More »

உலக மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – ஆன்டோனியோ குட்டெரெஸ்

உலகம் முழுவதும் மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் பேசிய அவர், “காஸா, மியான்மர், உக்ரைன் போன்ற இடங்களில் நடைபெற்று வரும் போர்களில் மனித உரிமைகள் கண்மூடித்தனமாக மீறப்படுகின்றன. ஆயுதம் தாங்கிய இயக்கங்களும், நாடுகளும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார்

Read More »

தமிழகத்தின் கொங்கு மண்டலம் இந்தியாவின் பல்வேறு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது- நரேந்திர மோடி

என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை ஜவுளித் தொழில் துடிப்பான தொழிலாக உள்ளது காற்றாலை மின்சார உற்பத்தியிலும் முன்னணி வகிக்கிறது- பிரதமர் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் இதயங்களில் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க சில கொள்ளையர்கள் தடுக்கின்றனர் சிலர் தங்களின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கின்றனர் நண்பர்களே தமிழ் மொழி, பண்பாடு மிகவும் நெருக்கமானது மட்டுமல்ல; சிறப்பு …

Read More »

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரின் வீடு தேடிச் சென்று அபராத ரசீது கொடுக்கும் முறையை போலீசார் அமுல்படுத்தி உள்ளனர். சென்னையில் அமல் படுத்தப்பட்ட இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

Read More »