“தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்”.. ஆளுநர் அர்லேக்கர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசினார். அப்போது, “நமது கலாசாரம் பல்வேறுபட்ட கலாசாரம் கொண்டது என்று சொல்வதைவிட தனித்துவமான கலாசாரம் என்று சொல்லலாம். வடஇந்தியாவில் உள்ளவர்கள் தமிழை கற்று வருகிறார்கள். தமிழ் கலாசாரம், பண்பாடை கற்கத் தயாராகவும் உள்ளனர். நானும் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறேன்; அதேபோல தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.