Other News

உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு பைஸர் முஸ்தபாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை

உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாக கூறியுள்ளதாவது, உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் தற்போதைய சட்டத்தில் சில உடனடித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சட்டத்தில் காணப்படும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னைய எல்லை மீள்நிர்ணயத்தில் காணப்பட்ட தவறுகளைத் திருத்தும் […]

நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு புதிய அரசமைப்பில் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் : சம்பந்தன்

புதிய அரசமைப்பில் ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன், வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று ஆர்.சி பெரியார் அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது, அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் […]

காங்கிரஸின் அபிவிருத்திக்கே மலையகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது : ஆறுமுகன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலத்தில் மலையகத்தில் கொண்டுவந்த அபிவிருத்திக்கே தற்போது அடிக்கல் நாட்டிவருவதாக இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார். தோட்ட சேவையாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த கூட்டமொன்று கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கத்திடம் 23 தடவைகள் பேசிதான் 4, 000 வீடுகள் பெற்றுக்கொண்டோம். அதற்கு […]

சின்னத்தால் சின்னாபின்னமான இரு பிரிவுகள் …மாற்றி மாற்றி மரண கலாய்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுக அம்மா கட்சிக்கும் அல்லது திமுகவுக்கும் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் கூட இவ்வளவு போட்டி இல்லை, ஆனால் அதிமுக அம்மா கட்சிக்கும், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் நடுவே பெரும் ரகளை ஓடிக் கொண்டுள்ளது. ஜெயிக்கிறோமோ இல்லையோ முடிந்த அளவுக்கு ஒரு தரப்பை இன்னொரு தரப்பு அசிங்கப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் தரப்பு […]

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சை

புத்த நெறியை மறந்த இரத்த வெறியர்கள் சிங்களர்கள் .

இலங்கையில் சிங்களர்கள் நடத்திய போர் புனிதப் போர் அல்ல தமிழர்கள் நடத்திய போர்தான் புனிதப்போர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்திருப்பது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்த திருமாவளவன், இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது என்றார்.ரஜினி மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் வந்தால் தங்களுக்கு பாதகமாக அமையும் என […]

நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது. துருவப்பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் கடல் மட்டத்தின் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் உயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் புவி நேரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றிரவு […]

ஜெயலலிதா சிகிச்சை

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வீதிவீதியாக தீவிர பிரச்சாரம்

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னுடைய வெற்றி இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன் மூன்றாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக […]

பணம் கொடுப்பதில்தான் வியூகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை’ என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. […]

சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் - ஓ.பி.எஸ். அணி

மதுசூதனன் வெற்றி உறுதி: ஓ.பி.எஸ்.

ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெற்றி உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். தேர்தலை ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொன்று ஜெயலலிதா. […]

ராம்ஜெத்மலானி கேரள மருத்துவமனையில் திடீர் அனுமதி!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேரளாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானிக்கு (94) இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.