Tuesday , March 19 2024
Home / தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

விடை தெரியா கேள்விகள் – கவிதை

விடை தெரியா கேள்விகள் - கவிதை

விடை தெரியா கேள்விகள் – கவிதை பல்நூல்கள் ஆய்ந்ததும் சால்புடையோர் செவியுற்றும் சிலபல கேள்விகள் நிற்கின்றன விடையற்று அனாதைகளாய்… தத்துவங்களும் அனுபவங்களும் தத்தளிக்கின்றன விடைக்கு வித்தின்றி… கடைநிலை பாமரனுக்கு மட்டுமல்ல கடைத்தேறிய மேதாவிகளுக்குள்ளும் கடை விரிக்கின்றன… விடைதெரியா கேள்விகள்… விடைதெரியா கேள்விகளுக்கு விடை தராமலே விடை பெறுமோ நம்மிடம் வாழ்க்கை… எழுதியவர் : Usharanikannabiran                         …

Read More »

வாழ்க்கை ஒரு போராட்டக்களம் – கவிதை

வாழ்க்கை ஒரு போராட்டக்களம் - கவிதை

வாழ்க்கை ஒரு போராட்டக்களம் – கவிதை வாழ்க்கை… காதல் கடந்து செல்லும் பருவ வயதில்… காதல் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் நம்மில் பலருக்கு… வாழ்க்கை கடலில் இருக்கும் முத்துப்போல… மூச்சடக்கி கடலில் இறங்கி ஏறுபவனுக்கே முத்துக்கள் கிடைக்கும்… கரையில் நிற்பவனுக்கு கரை ஒதுங்கிய… கிளிஞ்சல்கள் மட்டுமே கிடைக்கும்… காதலும் கிளிஞ்சல்போல் காதலே வாழ்க்கை இல்லை… வாழ்க்கை கடலில் நீ தவறவிட்ட நீர்த்துளிபோல்… எளிதாக கிடைத்துவிடாது இன்பம்… தடைகள் தாண்டி …

Read More »

தந்திர உறவுகள் – கவிதை

தந்திர உறவுகள் - கவிதை

தந்திர உறவுகள் – கவிதை அன்பு காட்டினால்- அப்பா அரவணைத்தால்- அன்னை அள்ளிக்கொடுத்தால்- அண்ணன் அன்னமிட்டால்- அண்ணி ஆடிப்பாடினால்- குழந்தை ஆமாப்ப்போட்டால்- அக்கா அணைத்தால்- கணவன் ஆசைகாட்டினால்- மனைவி ஆதரவுகாட்டினால்- அயலவர் அடங்கிப்போனால்- மைத்துனி அடிமையாய் இருந்தால்- மருமகள் அடக்கமாய் இருந்தால்- மகள் சீர் கொடுத்தால்- சகோதரன் அப்பப்பா என்ன தந்திர உறவுகளடா இது! உண்மையான உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் உறவுகள் உருவாவது எப்போது! எழுதியவர் : யோகராணி கணேசன்   …

Read More »

நட்பு – நண்பர்கள் கவிதை

நட்பு

நட்பு தினமும் நான் எழுதும் நாட்குறிப்பு என் நட்பு என் எழுத்துக்கு பதில் கூறுவது இதன் சிறப்பு ரகசியம் காப்பது சாசன வரையின்றி சுமக்கும் பொறுப்பு யாரும் எளிதாய் தொட இயலா நம்பக பாதுகாப்பு உடல் சார்ந்து சேர்ந்தது இல்லை இந்த இணைப்பு இரு உள்ளம் சேர்ந்து உருவானது இந்த இணைபிரியா நட்பு                  

Read More »

காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை

காதலும்

காதலும் ஒருவகை போதைதானோ என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே.. கண்ணாடி முன்னே உன் முகம் தேடினேன் குழப்பத்திலே… காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே… என் கண்களை மூடியும் உன்னை பார்த்தேன் உறக்கத்திலே.. காதலும் ஒருவகை போதைதானோ உள்ளுக்குள் வெறி ஏற்றும் மாயை தானோ தூக்கம் தொலைந்து, எடை குறைந்து நான் என்னவோ ஆகிறேன்… காதல் நோயால் கவிதை பாடி நான் தினம் தினம் வாழ்கிறேன்.

Read More »

நிழலில் தேடிய நிஜம்…!

சுட்டெரிக்கும் சூரியன் வானில் பவனி வந்து நிழலில் நிஜம் தேடி சுழலும் பூமியில் சூரியக்கதிர்களால் முத்தமிடுகின்றன! விண்ணில் மிதக்கும் வட்ட முழு நிலா மண்ணில் பரவும் ஒளி வெள்ளத்தில் நிஜத்தை நிழலில் தேடி அலைகிறது! ஆகாயத்தில் அள்ள அள்ள குறையாத சுடர் விடும் நட்சத்திர பூக்கள் நிலத்தின் மேல் ஒளிப்பூக்களை வீசி நிழலில் நிஜத்தை தேடுகின்றன! அரசியல்வாதிகள் மனசாட்சி நீதி நேர்மை முத்துக்களை ஊழல் கடலில் மூழ்கி தேடித் பார்க்கின்றனர்!

Read More »

இறைவன்

வாசம் வீசா எந்தன் வரியினில் மூழ்கிய வடா மலர்களைக் கொண்டு நாள்தோறும் நான் ஒரு பாமாலையை பூமாலை என தொடுக்க யாவரும் கைக் கூப்பி வணங்கும் இறையடிச் சேர்க்க என் உள்ளும் வெளியும் அமைதியுற எந்தன் எண்ணம் எல்லாம் வண்ணம் ஆக்கிடல் வேண்டியே ஓயாது இது…..!

Read More »

உலகம்

அந்த தொடர்வண்டி பயணத்திலே தன்னிலை மறந்து என் தோளில் சாய்ந்து நீ உறங்கியப்போது வெளி கண்கள் நம்மை காதலர்களாவே நினைத்திருப்பார்களே தவிர அதையும் தாண்டி ஒரு நட்பு ஒரு சகோதரத்துவம் இவைகளேல்லாம் அவர்கள் நினைவுக்கு வந்தே இருக்காது பாழாய் போன உலகம்…

Read More »

நட்பு

புரிதலின் நட்பில் எதிர்பார்ப்பு இல்லை இன்பங்களில் விலகியும் துன்பங்களில் கை கொடுத்தும் இருப்பதின் சுகம் தனிதான் எளியதை ஏற்றுக்கொண்டு வலியதை விட்டு கொடுப்பதும் சுகம் தான் தோற்று போவதின் வலி தோழமையில் இருப்பதில்லை வெற்றியின் மாப்பு கண்ணீரில் வெளிப்படும் தோழமையின் தோல்விக்காக நலமா என்ற கேள்வி கூட நட்புக்கு தேவையில்லை பார்வையின் சங்கம்ம் கூட பரிவை சொல்லி விடும். புரிதலின் நட்பில் எதிர்பார்ப்பு இல்லை

Read More »

துயர் துடைப்பு மையம்

துயர் துடைப்பு மையம் துயர் துடைப்பு மையம் என்று தினமும் ஒலி பரப்பாகின்றதே வானொலியில்……\ இதை எப்போது எங்கே துடைத்து எறிகின்றார்கள் கண் துடைப்பு வித்தை போல் ஆனது இத் திட்டம்…..\ ஆண்டுக்கு ஆண்டு தொடரும் தொடர் கதையாகப் போனது இந்த அவல நிலை….\ வானம் பொழிகின்றது பூமி நிறைந்து வளிகின்றது வெள்ளத்தால் ஆண்டில் ஒரு தடவையாவது பரிதாப நிலையில் குடிசை வாசிகள்……\ பாது காப்பு என்னும் பெயரில் கூட்டிக் …

Read More »