மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடுவதாக வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட குரே மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். எனினும் ஆளுநருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாக மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிளுக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண […]
Other News
கேப்பாப்புலவில் 279 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் 279 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இந்த காணிகள் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே காணிகளை […]
ஸ்ரீலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடிவு
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்றுஸ்ரீலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களையே இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்று இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியா முதலீடு செய்து ஸ்ரீலங்கா துறைமுக அதிகார […]
கிழக்கில் மதுபான உற்பத்திசாலை அமைக்க அனுமதிக்கப் போவதில்லை
எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த போதிலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமட் சூளுரைத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இளம் சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே சீரழிக்கப்படும் போது அதை கைகட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதற்கு தாம் ஒரு போதும் தயாரில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெற்ற […]
புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு சம்பந்தன் அழைப்பு
புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இளைஞர்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக நாட்டை பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குறிப்பிடும் சம்பந்தன் இதற்கு வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதி உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் […]
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொதுஉதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதிக்கு உதவியாக நிர்வாகப் பணிகளை இவர் ஆற்றுவார். இதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தார். […]
மைத்திரி-ரணில் ஆட்சியில் தொடரும் சித்திரவதைகள் ஐ.நா மீள்பார்வைக்கு
ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சாட்சியங்களுடன் கூடிய ஆவணமொன்றினை ஐ.நா மனித உரிமை பேரவையின் சர்வதேச காலாகால மீளாய்வுச் செயற்பாட்டிற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று சமர்ப்பித்துள்ளது. தென்னாபிரிக்கா ஜொஹானஸ்பேர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஸ்ரீலங்காவில் உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் வரை அதாவது மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதை […]
சர்வதேசம் தமிழர் பக்கம்! அச்சத்தில் மைத்திரி அரசு!! – சுமந்திரன் சுட்டுக்காட்டு
“சர்வதேச சமூகம் தமிழர்களுடன் இருப்பதைக் கண்டு மைத்திரி அரசு பயப்படுகின்றது. எனவே, சர்வதேச சமூகத்தை இன்னும் கூடுதலாக இறுக்கிக்கொண்டு நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதை விடுத்து சர்வதேச சமூகத்தினரை அடித்து விரட்டுகின்ற அடிமுட்டாள்தனமான காரியங்களில் தமிழர்கள் ஈடுபடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு […]
வத்துகாமத்தில் உடைந்து விழுந்தது பாடசாலைக் கூரை! – 26 மாணவர்கள் காயம்
கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள சிரிமல்வத்தை நவோதயப் பாடசாலையின் நேற்றுக் கூரை உடைந்து விழுந்ததில் 26 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 5 வகுப்பில் நடந்த இவ்விபத்தில் இயற்கைக்கடன் கழிக்கச் சென்ற ஒரு மாவணைத்தவிர ஏனைய அனைவரும் காயமடைந்து கண்டி வைத்திய சாலையின் 70ஆம் வார்ட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பாடசாலை வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தரம் 5 வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு கதறியபடியே […]
தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம்!
காணாமல்போனோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 40ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தி உறவினர்கள் தமிழர் தாயகத்தில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டம் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் இன்றும் தொடர்கின்றது. “உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை பார்ப்பதை விடுத்து தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்” என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கூறியுள்ளனர். […]





