கேப்பாப்புலவில் 279 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் 279 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்த காணிகள் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய 279 ஏக்கர் காணியை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் 248 ஏக்கர் அரச காணிகள் கேப்பாப்புலவிலிருந்தும் 31 ஏக்கர் தனியார் காணிகள் சீனியாமோட்டையிலிருந்தும் விடுக்கப்படவுள்ளன.

எஞ்சிய காணிகள் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 5 மில்லியன் ரூபா நிதி மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்படும் பட்சத்தில் 189 ஏக்கர் தனியார் காணிகளும் ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய கேப்பாப்புலவிலுள்ள 468 ஏக்கர் காணிகள் முழுமையாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவின் கீழ் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *