சசிலாவைப் பற்றி, ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்து பேசினால் தான், அது மக்கள் மத்தியில் வேகமாகச் சென்று சேர்ந்து, தினகரனுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அதை செய்யாமல் இருக்கிறார். அதை, அவர் செய்வது போல, பேசுங்கள் என, கட்சியின், சீனியர் தலைவர்கள் சிலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். அதையடுத்தே, அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிறைய தெரியும். ஆனாலும், […]
Other News
தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு
தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் போலி அட்டைகளும் இடம்பெற்றுள்ளன. எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும் என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் ரேஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரேஷன் அட்டைகளுக்கான ஆதார் பதிவு தகவல்களும் பெறப்பட்டுவிட்டன. 99 சதவீதம் […]
இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் ரூ.1500 கோடி சரக்குகள் தேக்கம்
இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் […]
தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி – அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் – ஜெ.தீபா பேட்டி
‘தி.மு.க. தான் எங்களுக்கு பிரதான எதிரி’ என்றும், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றும் ஜெ.தீபா கூறினார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி […]
முள்ளிக்குளம் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு பெருகும் ஆதரவுகள்
மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை ஸ்ரீலங்கா கடற்படையினரிடமிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி கிராம மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மன்னார் – விடத்தல்தீவு கிராம மக்கள் நேரடியாக விஜயம் செய்து ஆதரவு வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டம் முள்ளிக்குளம் கிராம […]
புலிகளை வேவுபார்த்த விமானம்; முதன்முறையாக ஏற்றுக்கொண்டது இந்தியா
வன்னிப் போரின்போது ஸ்ரீலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இதனைத் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. ஐ.என்.எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 […]
வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்கும் விடயமானது இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானதாக அமையும் என்று இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற […]
உண்ணாவிரதத்தை கைவிட்ட விமல் வீரவன்ச
சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கூறினார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டடுள்ளார். பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
வடமாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தி
வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ […]
புலம்பெயர் தமிழரால் யாழ் இசைக்கருவிகள் அன்பளிப்பு
யாழ்ப்பாணத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜி என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது . யாழ் பொது நூலகத்தில் பிரதம நூலகர் சுகந்தி தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் இந்த யாழ் இசைக்கருவி கையளிக்கப்பட்டது. இந்த யாழ் இசைக்கருவிகள் யாழ். பொது நூலகத்திற்கும் மற்றொன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதப்படும் யாழ் இசைக்கருவி தற்போதுவரை […]





