Other News

உறவுகளின் கண்ணீரைத் துடைக்க சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுப்போம்! – முல்லைத்தீவில் மாவை

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீரைத் துடிக்க சர்வதேச சமூத்திடமும், இலங்கை அரசிடமும் தன்னாலான அழுத்தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாவட்ட செயலத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்துக்கு நேற்று நேரில் சென்று ஆதரவைத் […]

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் நன்கொடை

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1தசம் 3 பில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது. திருகோணமலை துறைமுகத்தையும், துறைமுகத்தின் கடல்சார் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கும், துறைமுகத்தின் வழிகாட்டல் முறையை அபிவிருத்தி செய்வதற்குமான ஜப்பானிய உற்பத்திகளை இந்த கொடையின் மூலம் பெற முடியும். இக்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்துடன் […]

ஸ்ரீலங்காவுக்குள் ஐ.எஸ். ஊடுருவ முயற்சி; பாதுகாப்பு பிரிவை எச்சரித்த அமெரிக்கா

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயததாரிகள் ஈடுபடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதெவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்காவுக்கு அண்மையில் […]

ஜெனீவா வங்கியில் புலிகளுக்கு கணக்கு, சுவிஸ் புலிகள் தலைவர் தொடர்பு

சர்வதேச புலிகள் வலையமைப்பின் பெருந்தொகையான நிதி ஜெனீவா நகரிலுள்ள பிரபல வங்கியொன்றில் வைப்பில் உள்ளதாகவும், சுவிட்சர்லாந்திலுள்ள புலிகள் அமைப்பின் புதிய தலைவராகவுள்ள அப்துல்லா என்பவர் இந்த வங்கிக் கணக்குகளுக்கு பொறுப்பானவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. காரியாலயத்துக்கு முன்னால், இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஜெனீவாவிலுள்ள குறித்த வங்கியின் கணக்கிலிருந்து நிதி பெறப்பட்டுள்ள போதே இந்த வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற […]

மஹிந்தவின் மே தினத்தை காலிமுகத்திடலில் நடாத்த ஏற்பாடு செய்க-ரணில் ஆலோசனை

கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தை நடாத்துவதற்கு காலி முகத்திடலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இம்மே தினக் கூட்டத்துக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் பிரதமர் அந்த அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். கூட்டு எதிர்க் கட்சிக்கு காலி முகத்திடலின் முழுப் பகுதியும் தேவைப்பட்டாலும் அதனையும் வழங்குமாறும், அதற்குத் தேவையான பாதுகாப்பு, […]

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

யாழ் பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் துணைவேந்தரின் எழுத்து மூல அறிக்கையை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் இன்றைய தினம் (01) காலையில் நிர்வாகத்தினர் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று வகுப்புத்தடையினை இரத்து செய்தனர். எதிர்வரும் திங்கட்கிழமை (3) வழமைபோல் விரிவுரைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது – த.தே.கூ

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியம் அற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்ய முடியும் என கூறுவோருடன் பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கு தாம் தயார் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்

லொரி விபத்து : ஒருவர் பலி

உடபுஸ்ஸல்லாவையில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து பொகவந்தலாவையை நோக்கிப் பயணித்த லொரி ஒன்று இன்று காலை 11 மணியளவில் நானுஒயா ரதல்ல குறுக்கு பாதையில் விபத்துக்கள்ளானதில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பாதை ஒரத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட 7 பேர் காயம் மடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி 5 பேருடன் […]

தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது : அமைச்சர் மனோ கணேசன்

அரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் தமக்கு வேண்டிய திருத்தங்களை கொண்டுவந்து அரசியலமைப்பு கடையை மூட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு இடம் கொடுக்க சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது. இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், […]

தந்தை செல்வாவின் 119 ஆவது பிறந்ததினம் இன்று

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நினைவு கூறப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் துரையப்பபா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற […]