Other News

சரணடைந்த போராளிகள் விவகாரம்: சவேந்திர சில்வா மீதும் திரும்புமா விசாரணை?

வன்னியில் இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான வழக்கில் 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுப்பதா, இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை முல்லைத்தீவு நீதிமன்றம் அடுத்தமாதம் அறிவிக்கவுள்ளது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த வழக்குடன் தொடர்புபட்டுள்ளதால் அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாக்கிழமை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் திருகோணமலை […]

பாவற்குளம் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

வவுனியா, பாவற்குளம் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. பாவற்குளம் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25, 26ஆம் திகதிகளில் ஆறுமுகம் இலங்கராசா என்பவருக்கு மின்சாரம் பாய்ச்சி கிணற்றுக்குள் போட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காக 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தில்லையம்பலன் […]

யாழ். பல்கலை நிர்வாகத்தின் அடக்குமுறையைக் கண்டித்து கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் மீள இணைத்துக்கொள்ளுமாறு கோரியும், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் கலைப்பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் அனைத்துப் பீடங்களையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கலைப்பீட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் […]

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 20 […]

இங்கிலாந்து பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை கடித்து குதறி கொன்ற நாய்

இங்கிலாந்து நாட்டில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை அவரது வளர்ப்பு நாய் கொடூரமாக கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் மரியோ பெரிவொய்டோஸ்(41) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.இவரது வீட்டில் மேஜர் எனப் பெயரிடப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் உரிமையாளருக்கு நாய் உதவியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பிபிசி செய்தி […]

அமெரிக்க கோர்ட்டில் எச்-1 பி விசா வழக்கு தள்ளுபடி

குலுக்கல் நடத்துவதற்கு எதிரான எச்-1 பி விசா வழக்கினை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் ‘எச்- 1பி விசா’ இந்தியா உள்பட உலக நாடுகளில் எல்லாம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்ய இது உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அடுத்த நிதி ஆண்டுக்குரிய ‘எச்-1பி விசா’வுக்கு வரும் 3-ந் தேதி […]

வவுனியா வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஊர்வலமொன்றை மேற்கொண்டுள்ளனர். வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக எதுவித பதிலும் வழங்கப்படாத நிலையில், இன்றைய தினம் கவனயீர்ப்பு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் ஒன்றுதிரண்ட பட்டாரிகள், வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். பேருந்து நிலையத்தின் […]

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பணபலத்தை மீறி மக்கள் பலத்தை நம்பி ஆர்.கே நகரில் போட்டியிடுகிறோம். வருடாந்திர பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கிறார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் விரைவில் பரப்புரைக்கு வருவார். தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம். நதிகள் இணைப்பு விவசாயிகள், கச்சத்தீவு மீட்பு மீனவர்களின் […]

புதிய வர்த்தமானியில் முஸ்லிம்களின் காணிகள் உள்வாங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி விளக்கம்

முஸ்லிம்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள எந்த முஸ்லிம் மத ஸ்தலங்களோ, கிராமங்களோ அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் அரசுக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி செயலாளர் கையொப்பமிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி […]

அ.தி.மு.க.,வில் நிலவும் சர்ச்சைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம்

சசிலாவைப் பற்றி, ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்து பேசினால் தான், அது மக்கள் மத்தியில் வேகமாகச் சென்று சேர்ந்து, தினகரனுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அதை செய்யாமல் இருக்கிறார். அதை, அவர் செய்வது போல, பேசுங்கள் என, கட்சியின், சீனியர் தலைவர்கள் சிலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். அதையடுத்தே, அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிறைய தெரியும். ஆனாலும், […]