யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் […]
Other News
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி நேற்று முதல் மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மேலதிக பஸ்சேவை எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு – புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திலிருந்து மேலதிகமாக 3900 பஸ்பயணங்கள் இடம்பெறவிருக்கின்றன. சொந்த இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு திரும்பும் மக்களின் நலன்கருதி எதிர்வரும் […]
நெடுந்தீவு சிறுமி கொலை சந்தேக நபருக்கு மரண தண்டனை
நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி என்ற சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 […]
விமலுக்கு பிணை
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு 87 நாட்களுக்குப் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது. அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பல முறை பிணை கோரியிருந்த போதிலும் அவருக்கான பிணையை வழங்க நீதிமன்றம் […]
வவுனியாவில் “சமுர்த்தி அபிமானி “
உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வவுனியாவில் “சமுர்த்தி அபிமானி” நிகழ்ச்சித்திட்டத்தினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார ஆரம்பித்து வைத்தார். மாவட்டசெயலக வளாகத்தில் நேற்று ஆரம்பமான இந்த நிகழ்வினை சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனையிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் எதிர்வரும் 10ம் திகதி யப்பான் விஜயம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10ம் திகதி யப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் பிரதமருடன் இந்த விஜத்தில் பங்குகொள்ளவுள்ளார். 16ம்திகதி வரை யப்பானில் தங்கி இருக்கவுள்ள பிரதமர் இந்த விஜயத்தில் யப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபே (Shinzo Abe) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். யப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயம் மேலும் உதவும் என்று யப்பான் அரசாங்கம் […]
அரச நிர்வாகக் கட்டமைப்பை முடக்கி இனிப் போராட்டம்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீர்மானம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் 47 நாட்களை எட்டியுள்ள நிலையில் தமது போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாகக் கட்டமைப்புகளை முடக்கிப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் […]
மத்திய அரசிடம் அதிகாரம் காணப்படும் தீர்வே வேண்டும்! – ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை
மத்திய அரசின் கரங்களில் அதிகாரம் காணப்படும் அரசியல் தீர்வே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மத்திய அரசின் ஆட்சிப் பீடத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய மகாநாயக்க தேரர்கள் இருவரும், ஜனாதிபதிக்கு 21 விடயங்களைச் சுட்டிக்காட்டி நீண்ட கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையையும் குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “கண்டி தலதா மாளிகைக்கு […]
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் நகல் வடிவம் தயார்! – மே 3,4 இல் இறுதி செய்யப்படும்
புதிய அரசமைப்பைத் தயாரிப்பது தொடர்பான இடைக்கால அறிக்கையின் நகல் வடிவத்தை அடுத்த ஒரு சில தினங்களில் அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் அங்கத்தவர்களுக்கு அனுப்புவதற்கு நேற்று நடைபெற்ற வழிகாட்டல் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதம் மே மாதம் 3, 4 ஆம் திகதிகளில் நடைபெறும் அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் அடுத்த கூட்டத்தில் அந்த இடைக்கால அறிக்கையை இறுதி செய்து, அதனை அரசமைப்பு நிர்ணய சபையாகச் செயற்படும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது எனவும் இந்தக் […]
மஹிந்த அணியை எதிர்க்கட்சியாக ஏற்கமுடியாது! – சபையில் அநுரகுமார சுட்டிக்காட்டு
“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த அணி உறுப்பினர்களை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த முன்னணியிலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எதிரணிப் பக்கம் வந்து அமர்ந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாளையே வழங்குவதற்கு நாம் தயார்.” – இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க. நாடாளுமன்றத்தில் ஐ.நா. தீர்மான விவாதத்துக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் எழுந்த சர்ச்சையின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சி […]





