Other News

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவது எப்படி? – கால அட்டவணை தயாரிக்கவுள்ளது கூட்டமைப்பு

இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வடக்கில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அவசரமாகச் சந்திப்பதற்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் […]

சிரியா விமானப்படை தளம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்

சிரியா நாட்டின் விமானப்படை தளத்தின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள […]

முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் பிடித்து உதைத்த சிஆர்பிஎப்

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் […]

ஆர்.கே.நகர் தொகுதி – ஓ.பன்னீர்செல்வத்துக்கு 4 சுயேச்சை கட்சி வேட்பாளர்கள் ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு சுயேட்சை கட்சி வேட்பாளர்கள் 4 பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு சுயேட்சை வேட்பாளர் கணேசன் ஆதரவினை தெரிவித்ததோடு, ஆர்.கே.நகர் தொகுதி 47-வது வட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிராஜனுடன் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கனவே ரேணுகாதேவி, பத்மராஜன், மஞ்சுளா ரவிகுமார் ஆகிய 3 […]

ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு – தமிழக அரசு உத்தரவு

ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு கொடுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் பி.டபிள்யூ.சி. டேவிதார், கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் […]

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை […]

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் 50 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.4.5 கோடி ரொக்கபணம் பறிமுதல்

50 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.4.50 கோடி வீட்டில் ரொக்கபணம் பறிமுதல் செய்யபட்டு உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர். இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி […]

வலி.வடக்கில் 28.2 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறை ஊறணிப் பகுதியிலுள்ள சுமார் 28.2 ஏக்கர் மக்கள் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கியிருந்த குறித்த பிரதேசத்தினை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக மக்கள் போராடி வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சுமார் 28.2 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட குறித்த பகுதிளில் உள்ள கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டு, கிணறுகள் மூடப்பட்டு பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்ற நிலையில், குறித்த காணிகளின் எல்லைப்பரப்புக்களை அடையாளம் காண்பதில் அப்பிரதேச மக்கள் […]

உணவு ஒவ்வாமை இறக்காமத்தில் மூவர் பலி

அம்பாறை – இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த புதன்கிழமை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் உயிரிழந்த நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக […]

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசாங்கத்தின் வசம்

நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதனை போதனா வைத்தியசாலையாக நடத்திச் செல்ல தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி சர்ச்சை குறித்த தீர்வு திட்டம் இன்று அரசாங்கத்தால் வௌியிடப்படும் என முன்னதாக பாராளுமன்றத்தில் அவர் கூறியிருந்தார். இதற்கமைய சட்டமா அதிபரின் அனுமதியுடன் இலங்கை வைத்திய சபையால் முன்வைக்கப்பட்ட இலங்கை வைத்திய கல்வி குறித்த குறைந்த […]