Other News

நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடக்கம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்து  பிரதமர் கலந்துரையாடவுள்ளதுடன், பல முக்கிய பேச்சுக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மாரசிங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தப் […]

இறங்குதுறை இன்மையால் பூநகரி மீனவர்கள் சிரமம்

கிளிநொச்சி பூநகரி கரையோரப் பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மையால் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பூநகரியின் கடற்தொழில் கிராமங்களான வலைப்பாடு, வேரவில், நாச்சிக்குடா, பள்ளிக்குடா, ஆகிய கரையோரப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் தொழிலை மேற்கொள்ளும் வகையில் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியாதுள்ளது. மேலும் கடல்வற்றுக்காலங்களில் நீண்ட […]

வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை தொடர்பில் மக்கள் விசனம்

வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடத்தப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பெருமளவான பொது மக்கள் காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக வருகை தந்துள்ளனர். வவுனியா தமிழ் […]

யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை ; வழக்கை கொழும்புக்கு மாற்ற முயற்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களில் […]

ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிப்பு : விரைவில் 10,000 ரூபா வழங்க நடவடிக்கை

மலையக பெருந்தோட்டட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பவை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பாராளுமன்றத்தில் இணைந்து பேச்சுகள் நடத்தியதன் விளைவாக கொடுப்பவை 4000 ரூபாவால் அதிகரித்து விரைவில் 10, 000 ரூபாவை உதவி ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன தெரிவித்தபார். கடந்த காலங்களில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்னவு அதிகரிக்கபடவில்லை என்று பலர் பல்வேறு வகையிலும் குறிப்பாக முக புத்தகங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறுபட்ட […]

போர்க்குற்றம் இடம்பெறவில்லை; விசாரணை தேவையில்லை: யாழில் தான் தெரிவித்ததாக வெளியான தகவலை நிராகரித்தார் ராஜித!

போர்க்குற்றங்களோ, மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்று யாழ்பாணத்தில் வைத்து தான் தெரிவித்தார் என ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார். 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே தமிழ் மக்களுக்காகத் தான் குரல் கொடுத்து வருகின்றார் என்றும், தனது நிலைப்பாடு என்னவென்பது தமிழ் மக்களுக்குத் தெரியும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவசக்தி ஆனந்தன், […]

எங்கே எங்கள் உறவுகள்? – தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது அறவழிப் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்கின்றன. வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது. கிளிநொச்சியில் 48 ஆவது நாளாகவும், வவுனியாவில் 44 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 32ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மரு­தங்­கே­ணி­யில் 25 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 35 ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமை போராட்டங்கள் தொடர்கின்றன. […]

சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசு சதித்திட்டம்! – சபையில் சிவசக்தி எம்.பி. கடும் சீற்றம்

தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சபையில் குற்றஞ்சாட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டாண்டுகள் கடந்துள்ள,போதிலும் தமிழரின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும், மஹிந்தவைக் காரணம் காட்டியே தமிழரை இன்று நடுவீதிக்கு அரசு கொண்டுவந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு […]

காணிகளில் இராணுவம்! வீதிகளில் தமிழ் மக்கள்!! – ஐ.நாவின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளரிடம் விக்கி சுட்டிக்காட்டு

“வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் இராணுவத்தினர் இன்னமும் உள்ளனர். அந்த மக்களோ வீதிகளில் அமர்ந்திருந்து தமது சொந்த மண்ணை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த அவல நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். “தமிழ் மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடக்கில் அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர […]

பாபுல், பீடா, மாவா விற்றால் ஒருவருட சிறைத்தண்டனை! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு

பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட்  ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் […]