87 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் மேல் மாடியில் 350 பேர் அமரக்கூடிய வகையிலும், வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவு என்பனவும் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் மின்னேரியா, மெதிரிகிரிய. ஹபரண, ஹிங்குராங்கொட ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கும், […]
Other News
குச்சவெளியில் சட்டவிரோத காட்டு மரக்குற்றி வியாபாரம் பொலிஸாரால் முற்றுகை!
குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்குளம் – பேராறு வனப்பகுதியினுள் நீண்டநாட்களாக சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த காட்டு மரக்குற்றி வியாபாரம் பொலிசாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வனப்பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் வெட்டி குற்றிகளாக்கப்பட்ட நிலையில் 32 முதிரைமரக்குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மேலும் நால்வர் தப்பிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் 10 தொடக்கம் 15 வட்ட அடிப்பரப்பினையுடைய 8 முத்திரை மரங்கள் […]
ஒரு வாரத்திற்குள் வித்தியா கொலை வழக்கின் குற்றப் பத்திரிகை
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்றப் பத்திரிகை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அரசதரப்பு வழக்கறிஞர் நாகரத்தினம் நிஷாந்த் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கக்கோரி மேற்படி வழக்கு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒன்பது சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை […]
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் சந்திம
பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பட மாட்டாது. இதனை முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. இன்று நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்ளவில்லையெனவும், இதனால், மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லையெனவும் […]
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப் புறக்கணிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளில் எந்தப் பாதிப்புக்களும் இடம்பெறாது எனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் வழமை போல் இயங்குமென்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை இவ்வேலை நிறுத்தம் மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, அனைத்து […]
மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சபையில் பொது எதிரணி போர்க்கொடி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினர். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, 23/2 இன்கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் […]
கீதா குமாரசிங்க விவகாரம்: தீர்ப்பு கைக்கு கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை! – சபாநாயகர் தெரிவிப்பு
“கீதா குமாரசிங்க எம்.பி. தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சம்பந்தமாக எனக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் என்பன நிறைவடைந்ததை அடுத்து, வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரம் ஆரம்பமானது. […]
அமைச்சர்கள் சிலருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை! – அது குறித்தும் நடவடிக்கை தேவை என்கிறது ஜே.வி.பி.
தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கும், ராஜபக்ஷவினருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றது. எனவே, இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தில் கீதா குமாரசிங்கவுக்கு ஒருவிதத்திலும், மற்றையவர்களுக்கு ஏனைய விதத்திலும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் […]
தலதா மாளிகைக்கும் செல்கின்றார் மோடி!
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி கொழும்பு வரவுள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையை 12ஆம் திகதி மோடி திறந்துவைக்கவுள்ளார். மலையக பயணத்தின்போதே அவர் தலதா மாளிக்கைக்கும் செல்லவுள்ளார். […]
வடக்கு சுற்றுலா நியதிச்சட்டத்திற்கு நாடாளுமன்றத்திடம் அனுமதி!
வடக்கு மாகாணத்திற்குரிய சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டை வடக்கு மாகாண சபை கோரியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 46(அ)3(அ) பிரிவின் கீழ்தான் இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்திற்கு விடுப்பதாக குறிப்பிட்ட சபாநாயகர், இந்த அறிவித்தல் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். அத்தோடு, நியதிச்சட்ட வரைபின் பிரதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் […]





