வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய 131 விகாரைகள் இருந்தபோதிலும் அவற்றுள் 61 விகாரைகள் மாத்திரமே பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய விகாரைகள் […]
Other News
முள்ளிக்குளம் மக்களின் காணி விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் நேரில் சென்று ஆராய்வு
மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இன்று (வியாழக்கிழமை) முள்ளிக்குளம் கிராம மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது காணிகள் அடையாளம் காணப்படாதவர்களுக்கு அடையாளம் கண்டு வழங்கப்பட உள்ள நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முள்ளிக்குளம் மக்கள் அனைவரையும் தங்களிடம் முள்ளிக்குளம் காணி தொடர்பாக உள்ள சகல விதமான ஆவணங்களின் பிரதிகளுடன் முள்ளிக்குளம் ஆலயத்திற்கு […]
ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் – எப்.பி.ஐ தலைவர்
அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எப்.பி.ஐ அமைப்பும் ஒரு காரணம் என ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்த நிலையில், ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் அது பேரழிவாக இருக்கும் என எப்.பி.ஐ தலைவர் பதிலளித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டனர். முன்னர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது ஹிலாரி தனது தனிப்பட்ட வேலைக்காக அரசு இ-மெயிலை […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் அரச பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் வயது முதிர்வின் காரணமாக அரச பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரிட்டன் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத்தின் கணவரான 95 வயது இளவரசர் பிலிப், ஏடின்பெர்க் பிரபுவாக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக அவர் தன்னுடைய அரச பொறுப்பில் இருந்து இந்த கோடைக்காலத்துடன் விலக முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]
சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்க மாட்டோம்: வடகொரியா
அணு ஆயுத சோதனை விவகாரத்தில் வடகொரியா, சீனா இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது. சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதார தடைகளை அவ்வவ்போது கொண்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க […]
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியிலிருந்து மோட்டார் செல்கள் மீட்பு
கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தை அண்மித்த பகுதியிலிருந்து 17 மோட்டார் செல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நபரொருவர் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் செல்கள் காணப்படுவதை அவதானித்த அவர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் செல்களை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள்: ஜனாதிபதி
அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் அவற்றைப் பொது இடங்களில் பேசும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சரத் பொன்சேகாவுக்கு கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. அவரை அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கும் செயலணிக்குப் பொறுப்பாக நியமிப்பது […]
அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்: சிவாஜிலிங்கம்
வடக்கு கிழக்கிற்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவர் என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வலி. வடக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதி வழங்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதத்துடன் […]
பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேசவில்லை: பிரதமர்
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையிலான பாலமொன்றை அமைப்பது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைய இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வது […]
சுமணன் படுகொலை விவகாரம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை
யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி எம்.இளஞ்செழியன் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்தோடு, ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி இளங்செழியன், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையை […]





