தொழிற்சங்கப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க அரசு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக திறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் இருக்க விசேட குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், பிரதமருக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று சைட்டம் எதிர்ப்புப் போராட்டத்தில் நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்திய சேவைகளும், […]
Other News
சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா சாடல்
“படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசு சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றது. – இவ்வாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இறுதிப் போரில் […]
அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து! – மஹிந்தவின் மே தின நிகழ்வே காரணம் என்கிறார் சம்பந்தன்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் […]
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று முல்லைத்தீவுக்கு செல்கிறார் மைத்திரி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஜனாதிபதி முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த வருடம் தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய […]
மூன்று நாள் பயணமாக வடக்குக்கு ரணில்! – 19ஆம் திகதி செல்கிறார்
வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி செல்லவுள்ளார். பல்வேறு சந்திப்புக்களையும், ஆராய்வுகளையும் மேற்கொள்ளும் நோக்குடனேயே அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது எனத் தெரியவருகின்றது. இந்த மாதம் 19 ஆம் திகதி மன்னார் மாவட்டத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ளார். […]
கொலையாளிகளின் பாதுகாப்பு அரணாகவே தூதரகங்களைப் பயன்படுத்தினார் கோட்டா! – மங்கள குற்றச்சாட்டு
படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், கோட்டாபயவின் புதல்வர், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஆகியோர் தொடர்பிலும் அவர் தகவல்களை […]
மே 24-இல் போப் பிரான்சிஸ் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந்திக்க இருப்பதாக […]
எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் பலி
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமான் மாவட்டத்துக்குட்பட்ட காலி லுக்மான் மற்றும் காலி ஜஹாங்கிர் ஆகிய இடங்களில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி முகாம்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து அந்நாட்டு ராணுவ […]
ஆசிரிய உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிலுவையுடன் வழங்க நடவடிக்கை: இராதாகிருஸ்ணன்
ஆசிரிய உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளை நிலுவையுடன் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் சுற்றுநிருபங்கள் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தொிவித்த இராஜாங்க அமைச்சர், “கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் மேலதிக கொடுப்பனவு தொகையான 4 ஆயிரம் ரூபாவையும் சேர்த்து மொத்தமாக […]
பணிப்பகிஷ்காிப்பை அறிவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் மாலை வேளையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்பதிவு முறையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு வைத்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் […]





