Other News

லண்டன்: மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு – 19 பேர் பலி

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் நேற்று இரவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 10.33 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றுக் […]

மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு

கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த […]

மன்செஸ்டர் குண்டுத் தாக்குதல்: இலங்கை அரசாங்கம் கண்டனம்

பிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியா மன்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்ன தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் மூலமே இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் […]

மண்மேடு சரிந்து ஒருவர் உயிரிழப்பு: மாவனெல்லயில் சம்பவம்

கேகாலை மாவட்டம், மாவனெல்ல நகரில் மண் மேடொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவந்த பகுதியொன்றிலேயே மேற்படி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வித்தியா படுகொலை வழக்கு: சிறப்பு அமர்விற்கான நீதிபதிகள் நியமனம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரினால் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வழக்கு […]

சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்: மனோ

சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள் மற்றும் தனது அமைச்சில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர் மனோ கணேசன் இந்த விடையங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். தனது அமைச்சுக்குள்ளோ அல்லது வேறு எங்கேயுமோ […]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும், மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இவர்கள் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சரத் இலங்க சிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சுசில் […]

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. இவ்வாறான இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பூரண கடையடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதன்போது அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது கடமையில் இருந்து விலகி நடக்குமாறு அவ்வமைப்பு கோரியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக […]

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

முஸ்லிம் மக்கள் பொருளாதார பலத்தை கொண்டிருப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இருப்பிற்கு ஆபத்தென்ற நோக்கிலேயே தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”முஸ்லிம் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி […]

முன்னாள் நிதியமைச்சரை பாராட்டும் புதிய நிதியமைச்சர்

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டிருந்தாலும் ரவி கருணாநாயக்கவின் கடின உழைப்பினால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அமைச்சுப் பொறுப்புக்களில் உள்ள அனைத்துச் சவால்களையும் எதிர்நோக்க […]