Other News

Maithripala Sirisena

நாட்டில் சட்டம் ஒழுங்கை பேண வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் சட்டம் ஒழங்கை பேண வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி இவ்வாறு பணித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தின்போது, கஹவத்தை நகரில் தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையான சம்பவம் தொடர்பாகவும், தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சிற்குள் […]

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி: அதிபர் கிம் ஜான்-யுன் பாராட்டு

வடகொரியா நடத்திய குறைந்த அளவிலான தூரம் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த […]

தாய்லாந்தில் ராணுவ ஆஸ்பத்திரியில் குண்டு வெடித்தது: 20 பேர் காயம்

தாய்லாந்தில் ராணுவ ஆஸ்பத்திரியில் குண்டு வெடித்து 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ராணுவ ஆஸ்பத்திரி உள்ளது. இன்று அங்கு ஒரு சிறிய குண்டு வெடித்தது. அதில் அங்கு இருந்த 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தாய்லாந்தில் கடந்த 3 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதில் இருந்து அங்கு அரசில் நிலையற்ற தன்மை […]

அரசு இனவாதத்திற்குப் பணிகிறது : எம்.எஸ். சுபைர்

“சிறுபான்மையினருக்கு எதிரான அட்டகாசங்கள் தலை விரித்தாடுகின்றபோது சட்டத்தை அமுல்படுத்த முடியாத அரசாங்கம் இனவாதத்திற்குப் பணிந்து கைகட்டி நிற்கிறது” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் […]

மட்டு. மாவட்டத்தில் குடியரசு தின நிகழ்வுகள்

இலங்கையின் 45வது குடியரசுதின தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைபவம், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு அதன் பின்னர், உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கணக்காளர் எஸ்.நேசராஜா மற்றும் மாவட்ட […]

சாதனைகளே இனத்திற்கு பெருமை: நீதிபதி இளஞ்செழியன்

பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அந்த சாதனைகளே இனத்திற்கும் மொழிக்கும் பெருமை தேடித் தரும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். ஆதவனின் இணை அனுசரணையில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய நீதிபதி இளஞ்செழியன், […]

நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு!

சயிட்டம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதிலும் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்புடன் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்தியர்களும் இணைந்து கொண்டுள்ளதுடன், அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழமைபோன்று வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக […]

பாதுகாப்புச் செயலாளருக்கு புதிய பதவி!

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ஜேர்மனுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது குறித்த பதவியில் உள்ள கருணாதிலக அமுனுகம ஓய்வுபெறவுள்ள நிலையில், அந்த இடத்திற்கு கருணாசேன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமக்கான புதிய பதவி குறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், ஜேர்மன் அரசாங்கம் தமது நியமனத்தை ஏற்றுக்கொண்டதும் பதவியேற்பு இடம்பெறலாமெனக் கூறியுள்ளார்.

முகமாலை துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம்: முக்கிய தடயங்கள் கண்டெடுப்பு

முகமாலை பகுதியில் பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலமாக தாக்குதல் நடத்திய நபர்களின் தடயப் பொருட்கள் சில கிடைத்துள்ளதுடன் குறித்த பகுதியில் தாக்குதலிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் இலக்கமும் பொலிஸாருக்குக் […]

9 அமைச்சுக்களில் அதிரடி மாற்றம்! – நிதியமைச்சு கைமாறியது

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக நிதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய ஒன்பது அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இராஜாங்க அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சுப் பதவியில் இருந்த மஹிந்த அமரவீரவுக்கு, மேலதிகமாக இராஜாங்க அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றவர்கள் சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். புதிய அமைச்சுப் பொறுப்புக்களின் விபரம் ♦ நிதி மற்றும் ஊடகத்துறை […]