Other News

நாளை அவுஸ்ரேலியா பறக்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதி ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். நாளை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் ஜனாதிபதி முதலில் கன்பரா செல்வார். நாளைமறுதினம் 24ஆம்திகதி கன்பரா சென்றடையும் அவர், அவுஸ்ரேலியத் தலைவர்களைச் சந்தித்து விட்டு இரவு அங்கு தங்குவார். அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல் மற்றும் […]

ஐரோப்பிய நாடுகளின் உதவியே வேண்டாம்: உதறி தள்ளிய பிலிப்பைன்ஸ்

ஐரோப்பிய நாடுகள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வாய்ப்புள்ளதால் அவர்களின் உதவியே வேண்டாம் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெ தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெவின் போதை மருந்துக்கு எதிராக பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ரொட்ரிகோவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய யூனியன் பிலிப்பைன்ஸ் நாட்டின் நடவடிக்கைகளை கடுமையாக சாடி வருகிறது. ரொட்ரிகோவின் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் […]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையில், நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகும் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா பாடுபட்டது […]

ஈரான் அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு – மீண்டும் வெற்றி பெறுவாரா ருஹானி?

ஈரான் தேர்தலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிபர் ருஹானி, இப்ராஹிம் ரெயிசி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஈரான் அதிபர் தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று காலை உடன் நிறைவு பெற்றது. வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரங்கள் நிறைவுபெற வேண்டும் என்பது விதிமுறை ஆகும். பிரச்சாரங்கள் முடிவடைந்த […]

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும்: மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, கைதுகளை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து எட்டாண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது. உத்தேச புதிய சட்டமானது சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைப்பதற்கான அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச தர நிர்ணயங்களை பின்பற்றக்கூடிய வகையில் […]

அரசாங்கத்தை பாதுகாக்கும் கடமை அரச ஊழியர்களுக்கு உண்டு: வஜிர அபேவர்தன

நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான தலையாய கடமை அரச ஊழியர்களுக்கு காணப்படுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல்

வெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த திருமண மண்டபம் ஒன்று இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தொடர்ந்தும் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் முப்படையினர் ஈடுபட்டுள்ளதுடன், பொது மக்களின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் கூறினார். எனினும் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சம்பவத்தில் படுகாயமடைந்த 19 […]

யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகிறது. பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக […]

மன்னார் மாவட்ட செயலக கட்டடத் தொகுதி பிரதமரினால் திறந்துவைப்பு

மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்ட செயலக கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைத்து, உத்தியோகப்பூர்வமாக பணிகளையும் ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்டச் செயலக மைதானத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதமர் அரச காணிகளுக்கு விண்ணப்பித்திருந்த மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கிவைத்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அமைச்சர்களான வஜீர […]

யோஷிதவின் கோரிக்கை மனு ஒத்திவைப்பு

வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார். குறித்த கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று விளக்கமளிப்பதற்கு காலம் […]