முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முஸ்லிம் மக்கள் பொருளாதார பலத்தை கொண்டிருப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இருப்பிற்கு ஆபத்தென்ற நோக்கிலேயே தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”முஸ்லிம் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனத்தை வெளிப்படுத்துகின்றது.

ஒரு இனம் என்ற கோணத்தில் முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

அத்துடன், முஸ்லிம் மக்களின் இருப்பை உறுதிபடுத்துவதற்கு முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்” என்றும் கோரினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *