Other News

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் ராணுவ நிதி உதவி குறைக்கப்படும்: பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் ராணுவ நிதி உதவி குறைக்கப்படும் என பாகிஸ்தானுக்கு டிரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் மிரட்டல் நடைபெறும் நிலையில் அமெரிக்காவில் ராணுவ சேவைகள் கமிட்டியின் செனட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் ராணுவ உளவுத்துறை இயக்குனர் லெப்டினெட் ஜெனரல் வின்சென்ட் ஸ்டீவர்ட் பேசினார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில், வைத்துள்ளது. எனவே, அதன் […]

மான்செஸ்டர் தாக்குதலில் 7 பேர் கைது: தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் திங்கட்கிழமை இரவு அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த அரங்கில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் […]

தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்: ஆத்திரமூட்டல் செயல் என சீனா கருத்து

தென் சீனக் கடல் பகுதிக்குள் அமெரிக்கா தனது கடற்படையின் போர்க் கப்பலை அனுப்பியுள்ள நிலையில், இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை என சீனா கருத்து தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன. இந்த […]

வேலையில்லா பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும்: சம்பந்தன்

அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லாப் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு […]

வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு: இறுதி அறிக்கை தயார்

வட. மாகாண அமைச்சர்கள் மீதான முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்துவந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையின் 93ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. அதன்போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர், வட. மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து […]

அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற நடவடிக்கை: நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் காலதாமதமாவதாகவும், […]

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மந்த கதியில்: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே செல்கின்றதெனவும், இவ்விடயத்தில் அரசாங்கம் அதிக கவனஞ்செலுத்துவது அவசியம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியுடனான சந்திப்பின்போது, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டுங்–லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக காணாமல் போனோர் குறித்த அலுவலத்தை நிறுவுதல் உள்ளிட்ட நேரடி செயற்பாடுகளைக்கூட இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறியுள்ளதென டுங்–லாய் மார்க் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய […]

விபுலானந்தரின் 125ஆவது ஜனன தின நிகழ்வுகள் நாளை மட்டக்களப்பில்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவரும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமான க.பாஸ்கரன் தெரிவித்தார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விழாச் சபையின் தலைவர் க.பாஸ்கரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். […]

மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திச் சந்தை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், அவர்களது வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் மாபெரும் கண்காட்சியும், விற்பனையும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான வீ எபெக்ட் (We Effect) ) நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட இணைப்பாளர் ரீ. மயூரன் தெரிவித்தார். ஒன்பதாவது வருடமாக இத்தகைய பெண்களை ஊக்குவிக்கும் சந்தைக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறுவதாக அவர் மேலும் […]

ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இ​டையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் […]