வான் எல்லைக்குள் பறந்த வடகொரியா மர்ம பொருள் மீது தென்கொரியா துப்பாக்கி சூடு நடத்தியது. எந்திர துப்பாக்கியால் 90 ரவுண்டு சுட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே 2 அணுகுண்டு சோதனைகள் மற்றும் பல ஏவுகணைகள் சோதனைகளும் நடத்தி உள்ளன. இதற்கு அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா, ஐ.நா. சபை உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
Other News
வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப்
ரோம் நகர் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் வாடிகன் சென்று போப் ஆண்டவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மேட்டரல்லா, […]
இனவாதம் உருவாக இடமளிக்கமாட்டோம்: மங்கள சமரவீர
வடக்கு, கிழக்கில் எந்த வடிவத்திலும் அடிப்படைவாதம் மற்றும் இனவாதச் செயற்பாடுகள் உருவாகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே. இதில் வடக்கு, தெற்கு என்ற பிரிவுகள் இல்லை. அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படும் இனவாதச் செயற்பாடுகள் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் […]
வடக்கில் ஏன் புலிக்கொடியை ஏற்றமுடியாது? – சிறிதரன் கேள்வி
தேசிய கொடியில் உள்ள சிறுபான்மை இனங்களை குறிக்கும் நிறங்களை நீக்கிவிட்டு சிங்கக் கொடியை வடக்கில் ஏற்ற முடியும் என்றால், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை நீக்கிவிட்டு ஏன் புலிக் கொடியை தமிழ் மக்கள் வடக்கில் ஏற்ற முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிதி அமைச்சின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு […]
ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்! – ஹக்கீம்
ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதெனவும், இது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாகவே செயற்பட்டனர் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்தோடு, அண்மைய காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுச் செல்கின்ற இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள […]
கடந்த ஆட்சிக்கால அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது: சம்பந்தன்
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக தொடரும் சிறுபான்மையினங்களின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். கடந்த ஆட்சியில் இந்நிலைமைகள் மிகவும் மோசமாக காணப்பட்டன. […]
சிறுபான்மை மக்களை மிரட்டும் சிங்கள சுவரொட்டி!
பதுளை வாழ் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில், சிங்கள மொழியிலான சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘சிங்களயாகே இவசீம பரீக்ஷா நொகரனு’ (சிங்களவர்களின் பொறுமையைச் சோதிக்காதே) என்று அச்சிடப்பட்டு, பதுளை முதியங்கனை ரஜமஹா விஹாரையின் பின்னால் செல்லும் பிரதான வீதியின் மதிலில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் அண்மைய நாட்களாக சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த சுவரொட்டிகள் அப் பகுதி […]
மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் அதி உயர் வலுகொண்ட நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் பேரணி ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்வதற்கு முற்பட்ட போது, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நீடித்த சர்ச்சை காரணமாக, குறித்த கல்லூரியை அரசாங்கம் […]
பெலாரஸ் நாட்டில் இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை
பெலாரஸ் நாட்டில் இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டில் நடந்த இராணுவ தளபாடக் கண்காட்சியில், பங்கேற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க, பெலாரஸ் நாட்டில் இருந்து ஆயுத தளபாடங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறியிருந்தார். நாங்கள் பிரதானமாக, எமது கவசவாகனங்களை திருத்தியமைத்து, ஆயுததளபாடங்களை நவீனமயப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளோம். அத்துடன்ட் புதிய வகையான கருவிகள் […]
கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிளுக்கு ஆசிரியர் நியமனம்
கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனடிப்படையில் ஏனைய 3080 பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதலாம் வாரமளவில் இடம்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பட்டதாரிகளை ஆசிரியர் நிமயனத்துக்குள் […]





