சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்: மனோ

சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள் மற்றும் தனது அமைச்சில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர் மனோ கணேசன் இந்த விடையங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

தனது அமைச்சுக்குள்ளோ அல்லது வேறு எங்கேயுமோ எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும், தன்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் வருடம் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஆகிய கட்சிகளுக்கு நல்லாட்சிக்காக வாக்களித்த சிறுபான்மை மக்களை, எமது அரசாங்கத்திடமிருந்து பிரித்து, எதிர்வரும் தேர்தல் காலங்களில் வாக்களிக்காமல், அவர்களை வீட்டில் இருக்கச் செய்யும் திட்டமே இதுவாகும் எனவும் அவர் கூறினார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *