Other News

கடந்த 5 மாதங்களில் 150 பேரின் உயிரைக் காவுகொண்டது டெங்கு!

இலங்கையில் 8 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுகின்ற வேகம் உக்கிரமடைந்துள்ளது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகமாகப் பரவிவருகின்றது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 5 மாதங்களில் 60 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார […]

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலிலும் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல் சுற்று முடிவில் தெரியவந்துள்ளது. பிரான்சில் கடந்த மாதம் 7-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் என் மார்ச்சே(குடியரசை நோக்கி நகர்வு) என்ற கட்சியின் தலைவரான மேக்ரான் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில் 577 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் முதல் சுற்று தேர்தல் நடந்தது. மொத்தம் 49 […]

நாவன்லி கைது எதிரொலி: ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேர் கைது

நாவன்லி கைது எதிரொலியால், அவருக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியான அலெக்சி நாவன்லி கடந்த 30 நாட்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் அரசின் ஊழலுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் மாதத்திற்கு பிறகு பெரிய அளவில் நடத்தப்பட்ட போராட்டம் இது என்பது […]

வளைகுடா நாடுகளில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் – ஈரான் குற்றச்சாட்டு

கத்தார் மீதான தடை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிலவும் சமீபத்திய குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் உச்ச தலைவர் அயடோலா அலி கமேனெய் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் உடன் இருந்த தூதரக உறவுகளை சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 7 நாடுகள் திடீரென முறித்தன. பயங்கரவாதத்திற்கு கத்தார் துணை போவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஈரான் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் […]

ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் ஆவேச தாக்குதல் நடத்துவோம் – ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலத்தில் மேற்கத்திய நாடுகள், மத்தியகிழக்கு வளைகுடா நாடுகள், ரஷ்யா மற்றும் ஆசியாவிலுள்ள அனைத்து நாடுகளிலும் அதிரடி தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் போவதாக சபதம் ஏற்றுள்ளனர். […]

தேர்தல் குளறுபடிகளுக்காக உள்கட்சி எம்.பி.க்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று அக்கட்சி எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே மன்னிப்பு கேட்டுள்ளார். பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு […]

பிரதமரின் தீர்மானங்களால் அதிர்ச்சியில் ஜனாதிபதி மைத்திரி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியில் உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அண்மையில் நடத்தப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது சில முக்கிய தீர்மானங்களை பிரதமரே எடுத்திருப்பதாகவும், அதனால் ஜனாதிபதி அதிருப்தியடைந்திருப்பார் என தாம் நினைப்பதாகவும் அவர் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் […]

மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் இல்லை – மகிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ‘ஒரு மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்து ஒரு வாரத்துக்குள், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும். மாகாணசபைத் தேர்தலைப் அண்மையில் ஏற்பட்டது போன்ற பாரிய அனர்த்தம் அல்லது பிரபலமான ஆணை அல்லது நீதிமன்ற தீர்ப்பினால் மாத்திரமே பிற்போட முடியும். ஒரு அமைச்சரோ, அல்லது […]

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?

தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவரின் குற்றச்சாட்டுகள் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியிருந்தது. ஏனைய இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ஈபிஆர்எல்எவ், புளொட், […]

ஹுசேன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – ஜெனிவாவில் முறையிடப் போகிறாராம் சரத் வீரசேகர

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் உள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர, தற்போது நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின் […]