Other News

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் – மஸ்தான் எம்.பி வேண்டுகோள்

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம். நாட்டில் முஸ்லிம்களுடைய மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் மஸ்தான் எம்.பியினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களூடாக இனவாதத்தை தூண்டும் வெறுப்புப்பேச்சுக்கள், தகவல்கள் என்பனவற்றை பகிர்வதையும் பதிவு […]

இறுதிக்கட்ட போரில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட ஜனாதிபதி உத்தரவு

இறுதிக்கட்ட போரில் படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளை பிறப்பித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் மற்றும் […]

போர்க்குற்ற விசாரணையை ஏற்கமறுத்தே ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை கைவிட்டோம்! – தனது ஆட்சியை நியாயப்படுத்தி மஹிந்த அறிக்கை

“படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிட்டது” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு தனது ஆட்சியின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை நியாயப்படுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய […]

ஞானசார தேரரைத் தேடும் பணி தொடர்கின்றதாம்! – பொலிஸார் கூறுகின்றனர்

நாட்டில் இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவிட்டி குழப்பங்களை உருவாக்க முற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரை கைதுசெய்வதற்குரிய சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் […]

தேர்தலைத் தள்ளிப்போட ஞானசார தேரரைப் பயன்படுத்துகின்றது அரசு! – மஹிந்த அணி குற்றச்சாட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்காக அரசு ஞானசார தேரரின் விவகாரத்தில் சர்வதேசத்தின் கவனத்தைத் திசைதிருப்பிக்கொண்டிருப்பதாக மஹிந்த அணியான பொது எதிரணியின் பேச்சாளர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு இந்த அரசு ஏற்கனவே பல நொண்டிச்சாட்டுக்களைக் கூறி வந்திருக்கிறது. இப்போது ஞானசார தேரரின் விவகாரத்தைப் பூதாகரமாக்கி சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்துகொண்டிருக்கின்றது. உள்ளூராட்சி சபைத் […]

ஞானசார தேரர் பற்றிய ராஜிதவின் கருத்துக்கு சிஹல ராவய கடும் கண்டனம்!

ஞானசார தேரர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்துக்கு சிஹல ராவய கட்சியின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்றப் பிடியாணை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரைக் கைதுசெய்ய முடியாமல் இருப்பதாக கடந்த புதன்கிழமை டாக்டர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார் எனவும், அவர் உண்மையைப் […]

வடக்கு மாகாண சபையில் சுழற்சி முறை ஆசனம் யாருக்கு? – தமிழரசுக் கட்சி, புளொட் கடும் போட்டி

வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை இந்த ஆண்டு, சுழற்சி முறையில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது. புளொட் அமைப்பு தமக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் இந்த […]

இறுதி யுத்தத்தில்

மகஸின் சிறை, ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடுகளுக்கு கோட்டாவே காரணம்! – தண்டிக்கப்பட வேண்டும் என்று இடதுசாரி நிலையம் வலியுறுத்து

மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என இடதுசாரி நிலையம் குற்றம்சாட்டியுள்ளது. குற்றமிழைத்தவர்களைவிட குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இடதுசாரி நிலையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா மேலும் கூறியுள்ளதாவது:- “வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு […]

வொஷிங்டன் செயலமர்வில் கரு, சரா, புத்திக பங்கேற்பு!

ஜனநாயக பங்கேற்றல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பை வலுவூட்டுவதில் நாடாளுமன்றத்தின் வகிபாகம் என்ற தொனிப்பொருளில் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் விசேட செயலமர்வு நேற்று 12 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்தச் செயலமர்வு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த விசேட செயலமர்வில் இலங்கை, டுனீசியா, கொலம்பியா, நேபாளம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். குறித்த நாடுகள் அரசியல் ரீதியான […]

கொழும்பில் பிச்சையெடுக்கும் சிறுவர்களைப் பிடிக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை! – மூன்று மாதங்களில் 18 பேர் கைது

“கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பிச்சையெடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் அவர்களைப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் 18 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் மூலமாக இவர்களைப் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார். “கடந்த மூன்று மாதங்களில் கைதுசெய்யப்பட்ட 18 […]