Other News

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராகிறார் அருட்பணி ஜெபரட்ணம்

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி அறிவித்தலை வத்திகானிலுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் ஆயராக அருட்பணி ஆற்றிவந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை சுகயீனம் காரணமாக ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதனை அடுத்து மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மறை மாவட்டத்தின் அப்போஸ்தலிக்க […]

அயர்லாந்தின் இளம் பிரதமராக இந்திய வம்சாவளி மருத்துவர் தேர்வு

அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி பதவி விலகியதை அடுத்து ஆளும் கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் லியோ வரத்கர் அயர்லாந்தின் பிரதமராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் லியோ வரத்கர் அயர்லாந்தின் இளம் பிரதமராக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அயர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அயர்லாந்தின் பிரதமராகும் வாய்ப்பினை வரத்கர் பெற்றார். 38 வயதாகும் […]

ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை: 22 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவம் தொடர்ந்து கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க கூட்டுப்படைகளும், ஈராக் ராணுவத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு மாகாணமான தியாலா, வட மத்தி மாகாணமான சலாகுதீன் ஆகியவற்றின் எல்லையில் உள்ள மெட்டிபிஜா பகுதியில் பதுங்கி இருந்த […]

பனாமா லீக்ஸ் விவகாரம்: புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஆஜரானார் நவாஸ் ஷெரீப்

பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கோர்ட் அமைத்த கூட்டு புலனாய்வுக்குழு முன்பு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று விசாரணைக்கு ஆஜரானார். பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் வரிஏய்ப்பு செய்வதற்காக பல்வேறு நாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது. பனாமா கேட்’ என […]

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்பு- பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம், தமது நாட்டு குடிமக்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது. சிறிலங்காவில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய பிரித்தானிய அரசின் மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2009 மே மாதம், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்தன. 2011 இல் அவசரகாலச்சட்ட விதிகள் தளர்த்தப்பட்டன. […]

தமிழரசுக் கட்சிக்கு எதிராக அணிதிரளுங்கள்: கஜேந்திரகுமார்

வடக்கு மாகாண முதலமைச்சரை, பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி செயற்படுவதனைத் தடுக்க, தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக […]

சி.வி.க்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம்: மாவை

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு ஆளுநரிடம் கடிதமொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே […]

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சி.வி.க்கு அறிவுறுத்தல்

வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள […]

ஞானசாரருக்கு பிடியாணை!

பொது பல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலை ஞானசாரர் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தி வந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இன ரீதியான முரண்பாடுகளை […]

லண்டன் தீ விபத்திற்கு இலங்கை அரசாங்கம் இரங்கல்!

மேற்கு லண்டனில் தொடர்மாடிக் கட்டட தீ விபத்தினால் ஏற்பட்ட பேரழிவிற்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கை அரசின் சார்பில் இரங்கல் வெளியிட்டுள்ளார். 27 மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தானது பேரதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அன்பான உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார். அதேவேளை, காயங்களுக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேற்படி […]