வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர். அமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை. இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு […]
Other News
வடக்கின் 4 அமைச்சர்களையும் ஒரேயடியாக நீக்கினால் விக்கியும் தனது அமைச்சு பொறுப்புகளை துறக்கவேண்டும்! – மாவை வலியுறுத்து
“வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். வரம்பு மீறிச் செயற்படும் அவரின் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க குற்றவாளிகளான இரு அமைச்சர்களை மட்டும் அவர் பதவிநீக்கம் செய்து புதியவர்களை நியமிக்கவேண்டும். இதைவிடுத்து குற்றவாளிகளுடன் நிரபராதிகளான அமைச்சர்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றினால் அவரும் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடன் துறக்கவேண்டும். புதியவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் […]
வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: விக்கியுடன் சம்பந்தன் தொலைபேசியில் பேச்சு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில், அவருடன் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தொலைபேசியில் திடீரென உரையாடியுள்ளார். இந்த அவசர உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த உரையாடலின்போது வரம்பு மீறிய வடக்கு […]
நியாயத்தைப் பெறுவதில் தமிழர்களுக்கு நெருக்கடி! – ஜெனிவாவில் அறிக்கை முன்வைப்பு
“நீதியை வழங்குதல் மற்றும் பொலிஸ் சேவையில் சிறுபான்மை இனங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை ஆகியன இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. நியாயத்தைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.” – இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்த அறிக்கையில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் மோனிகா பின்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது அமர்வு ஜெனிவாவில் […]
முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளை எமக்குத் தெரியும்! – ஹக்கீம் தெரிவிப்பு
“முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும். ஆனால், அவை வெளியில் சொல்லமுடியாத அளவுக்குப் பாரதூரமானவை.” – இவ்வாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் உச்சத்தில் இருந்ததாலேயே அவரது ஆட்சி கவிழ்ந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆட்சியாக அந்த ஆட்சி இருக்கவில்லை […]
இனவாதம் ஊடாக் சமஷ்டியை நிறுவ நல்லாட்சி முயற்சியாம்! – விமலின் கண்டுபிடிப்பு இது
“முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளின் ஊடாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், சமஷ்டி தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாடு முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செய்ற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை வெறுமனே ஓர் இனவாதச் செயற்பாடாகப் பார்க்கமுடியாது. இதன்பின்னால் பெரும் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று இருக்கின்றது. […]
மைத்திரி மீது மஹிந்த அணி கடுகளவேனும் விசுவாசமில்லை! – நாமல் கூறுகின்றார்
“நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரி மீது எமக்கு மதிப்பு உண்டே தவிர, அவர் மீது எமக்குக் கடுகளவேனும் விசுவாசம் இல்லை. இதனால்தான் மஹிந்த அணியால் அவரின் தலைமையை ஏற்று அவருடன் இணையமுடியாமல் உள்ளது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எம்மைச் சிறையில் அடைத்ததையும் பொருட்படுத்தாது எம்மை அமைப்பாளர் பதவியிலிருந்து […]
பொதுபலசேனாவை இன்றும் கோட்டாவே இயக்குகின்றார்! – அமைச்சர் எஸ்.பி. குற்றச்சாட்டு
“பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாலூட்டி வளர்த்த கோட்டாபய ராஜபக்ஷவே இன்றும் அந்த அமைப்புக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றார்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இனவாத, மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் குழுக்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாதுகாப்பு வழங்கி அந்த அமைப்பை வளர்த்தெடுத்தவர் முன்னாள் பாதுகாப்புச் […]
ஞானசார தேரருக்கு அமைச்சர் பாட்டலியே பாதுகாப்பு வழங்கி வருகிறார்! – திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு
இலங்கையின் அமைதிக்கு எதிராக இனக் கலவரங்களைத் தூண்டிவிடும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இந்த அரசின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவே பாதுகாப்பு வழங்கி வருகிறார் என லங்கா சமசமாஜ கட்சியின் பிரதம செயலாளரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். ஞானசார தேரருக்கு அமைச்சரொருவர் பாதுகாப்பு வழங்கி வருகின்றார் என ஊடகங்கள் மறைமுகமாக செய்திகளை வெளியிட்டு வந்திருப்பதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே அந்த அமைச்சர் […]
இன, மத கலவரக்காரர்களை அடக்க விசேட அதிரடிப் படை களமிறக்கம்!
இலங்கையில் இன, மத கலவரங்களைத் தூண்டுபவர்களையும், அக்கலவரங்களை நடத்துபவர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் பொறுப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. “நாளாந்தம் அதிகரித்துவரும் இத்தகைய இனக் கலவரங்களால் நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது விசேட அதிரடிப்படையினரிடமும் கலவரங்களை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் நாடுமுழுவதிலும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது” என்று பொலிஸ் […]





