வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருக்காக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் நாள் நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில், புதிய சிம்மாசனத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அமர்ந்திருந்தார். இதுகுறித்து கொசுறுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, சோழர் கால அரசர்கள் பயன்படுத்தியதைப் போன்ற ஆசனத்தை மாகாணசபையின் உயர் அதிகாரி ஒருவர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Other News
ஆலோசனை கூறலாம்; உத்தரவாதம் தர முடியாது – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் பதில்
வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பது தொடர்பாக, நடத்தப்படும் கலந்துரையாடலின் ஒரு கட்டமாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத […]
நல்லிணக்கத்தினை குழப்பினால் நடவடிக்கை: மலிக் சமரவிக்ரம
இனவாத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், “ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியத்தை வலுவூட்டி மதம் சாராத ஒரு கட்சியாக செயற்பட்டு வருகின்றது. உண்மையான இலங்கையின் அடையாளத்தைக் கட்டியெழுப்ப கட்சி அர்ப்பணிப்புடன் […]
வடக்கு அமைச்சர்கள் விவகாரம் மீள் பரிசீலனை
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரை தொடர்ந்து பணியில் அமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தான் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ். ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையில் வெடித்துள்ள பிரச்சினையை சமரசமாக தீர்க்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள சமய தலைவர்கள், இன்று (திங்கட்கிழமை) காலை வடக்கு […]
கீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்
கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி , பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையில் இந்த நீதவான் குழு குறித்து மனுவை விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர். குறித்த மேன்முறையீட்டு மனுவின் பிரதிவாதிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த ஐவரடங்கிய நீதவான் குழு பிரதம […]
புகையிரத ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு
புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் ஊதிய கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு வழங்காமையை கண்டித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். இவர்களின் கோரிக்கை குறித்து அண்மையில் பேச்சுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டாலும் அரசு உறுதிமொழி எதனையும் வழங்கியிராத சூழலிலேயே நாளை போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில்
வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வவுனியாவில் சற்று பற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது
முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம்
சிரியா வான்வெளித் தாக்குதல்: 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக ரஷ்யா தகவல்
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் எஸ்ஸார் மீது சிரியா ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் சுமார் 180 ஐ.எஸ் தீவிரவாதகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் […]
ஜப்பான்: அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதியதில் மாயமான கடற்படை வீரர்கள் உயிரிழப்பு
ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதிய விபத்தில் மாயமான கடற்படை வீரர்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற நாசகாரி போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 […]





