கடந்த 30 வருட உள்நாட்டுப் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவான மக்(MAC) நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் , 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளில் மக் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 2025 இல் கண்ணிவெடிகள் […]
Other News
காணாமல் போனோர் விடயத்தில் ஈ.பி.டி.பி.க்கு நேரடி தொடர்பு: சரவணபவன்
”கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் காணாமல் போனோர் குறித்த சம்பவத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் 450 பேர் வரை காணாமல் போயுள்ளனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்தோடு, மெக்ஸ்வல் […]
பிரதமர் தலைமையில் ஜெனீவா பிரேரணை அமுலாக்கக் குழு
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்தும் அமுலாக்கக் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக்கப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் […]
சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வலியுறுத்தல்
யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா. கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த 17 வயதுடைய சுந்தரராஜன் ப்ரெட்ரிக் என்ற ஈழத்து இளைஞன் இதனை வலியுறுத்தியுள்ளார். நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதிப்பாடு இலங்கை அரசாங்கத்திடம் இல்லையென குறிப்பிட்ட குறித்த இளைஞன், […]
ஐ.நா. ஆணையாளருக்கு எதிராக முறைப்பாடு!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவர் Joaquin Alexander Maza Martelli இடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் படையதிகாரி சரத் வீரசேகர இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். குறித்த இருவரது அறிக்கைகளும் உண்மைக்கு புறம்பானவை எனவும், […]
உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை
உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை.சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய 2017ஆம் வருடத்திற்கான தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவை 81 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் முதலாவது இடத்தையும்,சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும்,மூன்றாவது இடத்தை ஜப்பான் ஓல் நிபொன் விமான சேவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தரப்படுத்தலில் கடந்த வருடம் இலங்கை 67 ஆவது […]
பிரான்ஸ்: எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக நியமித்தார் அதிபர் மெக்ரான்
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி […]
டிரம்பை ஒருபோதும் காதலிக்கவில்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு
‘டிரம்பை ஒருபோதும் நான் காதலிக்கவில்லை’ என பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவியும், மாடல் அழகியுமான கர்லா புரூனி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி (49). இவர் முன்னாள் மாடல் அழகி. பிரபல பாடகியாகவும் திகழ்ந்தார். இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இவர் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அவரது 2-வது மனைவி மார்லா மாப்பில்ஸ் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்ததாகவும் […]
கோமாவில் இருந்த மாணவன் மரணம்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம்
வடகொரியாவால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கோமா நிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரின் மரணத்துக்கு வடகொரியாவை குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு […]
ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிட முயற்சி: வாசுதேவ
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனவாத கலவரங்களை நாட்டில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் இன்று இனவாத கலவரங்களோ முரண்பாடுகளோ […]





