கீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையில் இந்த நீதவான் குழு குறித்து மனுவை விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.

குறித்த மேன்முறையீட்டு மனுவின் பிரதிவாதிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த ஐவரடங்கிய நீதவான் குழு பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது.

கீதா குமாரசிங்க தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *