Other News

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் அதிபர் இமானுவேல் மெக்ரான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஓராண்டுக்குள் ஆட்சியை பிடித்தார். அதிபர் தேர்தல் முடிந்ததையொட்டி […]

ஞானசார தேரர் குறித்து தகவல் தாருங்கள்: பொலிஸார் வேண்டுகோள்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவிபுரிபவர்கள் குறித்துத் தகவல் வழங்கினால் அவரைக் கைது செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் […]

கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படவில்லை: மல்கம் ரஞ்சித் ஆண்டகை

கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க ஆலயங்கள் மீது அண்மைக்காலமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டில் இனவாதிகளினால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பல்வேறுபட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக […]

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்த ராஜாவின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமானதுடன், முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு இடம்பெறுகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை […]

வடக்கு விவகாரத்தில் நிதானம் முக்கியம்: யாழ். ஆயர்

வடக்கு அமைச்சர்கள் விவகாரம் எந்த தரப்பினரையும் பாதிக்காத வகையில், நிதானமாகவும் சமாதானத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென யாழ். ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அமைச்சர் எஸ்.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி உள்ளிட்ட குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். ஆயரை சந்தித்து வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பான பிரச்சினைகளை […]

வடக்கு மாகாண சபை முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு: சம்பந்தன்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனவும் இதற்கு தீர்வு காண்பது என்பது சிறிய விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்தோடு, […]

டெங்கு நோய்க்கான இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு!

டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டெங்குநோய் ஒழிப்புத் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் இலகுவான முறைகளில் தமது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணக் […]

மஹிந்த பாகிஸ்தான் விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு நாளை விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 2017 தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பிலான மாநாட்டில் இவர் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கான பல்கலைக்கழகத்தின் தலைவரான லெப்டினன் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் அமைப்புகளின் திருப்திக்காக என் மீது விசாரணை: கோட்டா

புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா தம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச, தெரிவித்துள்ளார். அர்த்தமில்லாத விசாரணைகளில் தன்னை தொடர்புபடுத்தி விட்டு தன்னை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.