எமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வையுங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காணமல்போனோர் விடயத்தை உதாசீனம் செய்யாது, தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமது போராட்டம் தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *