அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இன்று 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை இவர் இலங்கையில் தங்கியிருப்பார். இதன் போது வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, அவுஸ்ரேலியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் அவுஸ்ரேலிய அமைச்சர் […]
Other News
போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை, விசாரணை எதற்கு? – ராஜித கேள்வி
இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். “போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றன என்று நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றது. போர்க்குற்ற விசாரணைகள் என்கின்ற போது, புலிகளின் குற்றங்களை விசாரிப்பது யார்- அவர்களில் யாரை விசாரிப்பது- அவர்களின் […]
ஐ.தே.கவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்
கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. பேரணியைப் பார்வையிடும் மேடையில்,ஐதேகவின் ஏனைய தலைவர்களுடன், ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையில் கட்டப்பட்டிருந்த பதாதையின் ஒரு பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் படமும், மற்றொரு பக்கத்தில் சரத் பொன்சேகாவின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. அத்துடன், பேரணி நடத்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் வலியுறுத்து
“போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு நீதி வழங்குவதாக இலங்கை அரசு வாக்குறுதியளித்துள்ளது. காலத்தைக் கடத்தாமல் தீர்வு வழங்க இலங்கை அரசு முன்வர வேண்டும்.” – இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் ஷெயில் ஷெட்டி மன்னாரில் வைத்துத் தெரிவித்தார். நில விடுவிப்புக்காகப் போராடும் முள்ளிக்குளம் மக்களையும், மறிச்சுக்கட்டிப் பிரதேச மக்களையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் […]
நீதி வேண்டி தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது உறவுகளின் அறவழிப் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவுகளின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்கின்றன. வடக்கில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 44ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரையில் போராட்டக் களத்தில் இருந்து அகலப் போவதில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியா நகரில் காணாமல்போனோரின் உறவுகள், இன்று 40 ஆவது நாளாகவும் […]
போர்க்குற்ற விசாரணை விவகாரம்: மைத்திரியின் கருத்துக்கு வியாழனன்று சபையில் சம்பந்தன் தக்க பதிலடி!
“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு முரணாக குறிப்பாக போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு நாளைமறுதினம் வியாழக்கிழமை நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும்.” – இவ்வாறு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எந்தவொரு படைவீரரையும் நீதிமன்றில் நிறுத்துவதற்கு தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு […]
வைரஸ் அச்சுறுத்தலால் மூடப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம்!
கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி இன்று திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க அறிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் ஒரு வகை காய்ச்சல் பரவுவதாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சுமார் 500 மாணவர்கள் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தை நாடியுள்ளனர் என்று துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் […]
அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி உயிரிழப்பு!
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையை ( எஸ்.டி.எவ்) உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார். இவர் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஒரே மகனாவார். இறக்கும்போது இவருக்கு வயது 80 ஆகும். எயர் சிலோன் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றிய ரவி ஜெயவர்த்தன, பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார். இதன்போதே அவர், 1984ஆம் ஆண்டு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினார். […]
வடக்குப் போராட்டங்களுக்கு உரிய தீர்வைத் தரவேண்டும்! – மைத்திரியிடம் விக்கி நேரில் வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்புப் போராட்டம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் எடுத்துக்கூறியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவருக்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். ஜனாதிபதியை மைத்திரிபாலவை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி செயலத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் முன்வைத்துள்ள பரிந்துரைகள் வருமாறு:- காணாமல்போனவர்கள் காணாமல்போனவர்களின் உறவினர்களின் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் […]
புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ!
தேசத் துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு கூட்டம் ஒன்றில் பேசிய பேசிய வைகோ, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். குறித்த வழக்கானது பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று வைகோ […]





