Other News

ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்காவை கையெழுத்திடக் கோருகிறது பிரித்தானியா

கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா உதவி வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலத்தில் சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 1.2 பில்லியன் ரூபாவை பிரித்தானியா செலவிடுகிறது. 2016 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் மேலும் 600 சதுர கி.மீ பரப்பளவு நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றி மக்கள் […]

இந்தியப் பெருங்கடல் மீது கவனம் செலுத்தும் ஜேர்மனி – தூதுவர்களுக்கான கூட்டம் சிறிலங்காவில்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை, புதிய மூலோபாய மற்றும் இராஜதந்திர முன்னுரிமைக்குரிய பகுதியாக கருதி, ஜேர்மனி தனது நாட்டு தூதுவர்களுக்கான கூட்டம் ஒன்றை முதல் முறையாக சிறிலங்காவில் ஒழுங்கு செய்துள்ளது. இன்று இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஜேர்மனியின் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிராந்தியத்தை வடிவமைப்பதில் உலகளாவிய போட்டி நிலவுகிறது. பெர்லின் ஒரு பிரதான வணிக சக்தி என்ற வகையில், இந்தியப் பெருங்கடலில் உறுதிப்பாட்டையும், சட்டத்தையும் உறுதிப்படுத்துவதில் ஆர்வம் […]

2017 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ்மொழிதின விழா வடக்கில்

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கல் விழா 2017 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு இம்முறை வட மாகாணத்தில் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வட மாகாண கல்விப்பணிமனையில் நடைபெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண மேலதிக […]

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற வகையில், ஐந்து பேருக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தினால் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆறு மாதங்கள் தொடக்கம் 19 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2003தொடக்கம் 2010 […]

இந்தியா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்: ரஷிய பிரதமர் புதினுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆறுதல்

இந்தியா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என, ரஷிய பிரதமர் புதினுக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடிதம் மூலம் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்த படியாக 2-வது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று ஒரு மெட்ரோ ரெயிலில் குண்டு வெடித்ததில் 2 பெட்டிகள் கடும் சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். […]

எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது: நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு கடும் எச்சரிக்கை

எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது.இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி […]

சிரியாவில் அரசு தரப்பு ராணுவம் நடத்திய வான்வெளி விஷ வாயு தாக்குதல்: 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் […]

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக பலி

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் கெய்ட்லின் நெல்சன் (20) என்பவர் படித்து வந்தார். அந்த் அக்ல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது, அதில் கெய்ட்லின் கலந்துகொண்டார். போட்டியின்போது, 4 துண்டு கேக்குளை இவர் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உணவு ஒவ்வாமையால் […]

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் வெடி குண்டு வெடித்தத சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக 14 ஆக உயர்வு

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் வெடி குண்டு வெடித்தத சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ரஷியாவில், தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள இரண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 மெட்ரோ ரெயில் பெட்டிகளில் நேற்று குண்டுகள் வெடித்தன. கேட்பார் இன்றி கிடந்த பொருட்களில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த குண்டு […]

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை – மு.க.ஸ்டாலின்

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க […]