Other News

கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் – விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது: நீதிபதிகள் அறிவுறுத்தல்

கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் உள்ளதால் விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய சிறு-குறு கடன்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூன் 28-ந்தேதி தமிழ் நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அர சாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக் […]

ஆர்.கே.நகர் தொகுதி – ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நாளை சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் நாளை கட்சிகளின் சின்னம் பொருத்தும்பணி நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான 2-ம் கட்ட பயிற்சி புதுவண்ணாரப்பேட்டையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கலந்து கொண்டு பயிற்சியை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் 1635 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தேர்தல் கமி‌ஷன் […]

விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டம், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரோணித் கிருஷ்வான்; விழுப்புரம் மாவட்டம், தடாகம் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் ராஜவேல்; திருவள்ளூர் மாவட்டம், பெரியகளட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் வினித் மற்றும் பிளேஸ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் -மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீனவர் சங்கத்தலைவர்கள் போஸ், தேவதாஸ், ஜேசு, எமரிட், சகாயம் ஆகியோர் இன்று மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பின் மீனவர் சங்கத்தலைவர்கள் கூறியதாவது:- வருகிற 7-ந் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை சென்று […]

மாறி வரும் இலங்கைத் தீவின் வரைபடம்

இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்து வருகிறது கொழும்பு துறைமுக நகரம் அல்லது நிதி நகரத்தை அமைக்கும் பணிகளால் இலங்கைத் தீவின் உருவ வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இலங்கைத் தீவின் புதிய வரைபடத்தை வரையும் பணியில் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். துறைமுக நகரத் திட்டம் நிறைவடைந்த பின்னரே, இலங்கைத் தீவின் இறுதி வரைபடம் வெளியிடப்படும். தற்போது துறைமுக நகரப் பணிகள் நடந்து வரும் நிலையில், கொழும்பில் காலிமுகத்திடலை […]

வில்பத்து தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் தவறானது ; ஸ்ரீநேசன்

சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு அனைத்து சிறுபான்மை சமூகங்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அநீதிகளுக்கு எதிராக போராடும் பொழுது அதனை பொருட்படுத்தாது செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு – குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய […]

பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்ட சமஷ்டி முறையை மைத்திரி எதிர்ப்பது ஏன்

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம், கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் யுத்த குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்க முடியாது என தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் […]

சிறுபான்மையினரின் அபிலாசைகளை பெற சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்

சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு […]

விமல்லின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இரண்டு நீதியரசர்களில் ஒருவர் சமூகமளிக்காத காரணத்தினால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபரை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று […]

GSP+ வரிச்சலுகை: இறுதி தீர்மானம் மே மாதம் 15ஆம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவது குறித்த அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பிய ஆணைக்குழுவால் ஐரோப்பிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கை அரசு மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் 27 நிபந்தனைகளில் அரசு முன்னேற்றம் […]