Other News

ஐ.நாவின் அழுத்தம் வந்தாலே பரிந்துரைகள் அமுலாக்கப்படும்! – செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டு

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அழுத்தங்களைக் கொடுத்தால்தான் இலங்கை அரசு பரிந்துரைகளை நிறைவேற்றும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்திருந்தார். இதற்குப் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே செல்வம் […]

அரச வைத்தியர்கள் வெள்ளியன்று மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு! – 60 தொழிற்சங்கங்கள் ஆதரவு

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) விவகாரம் தொடர்பில் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அரச வைத்தியர்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று இலங்கை அரச வைத்தியர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டாக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம், கால்நடை வைத்தியர்கள் சங்கம், அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம், இணை சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம், வங்கி […]

சைட்டத்தை மூட இடமளியோம்! – அரசு திட்டவட்டம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஓர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் என்பதால் அதை எக்காரணம் கொண்டும் மூடுவதற்கு அரசு இடமளிக்காது என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “சைட்டம் பிரச்சினை குறித்து கலந்துரையாட இலங்கை வைத்தியர் சங்கத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தபோதிலும் அவர்கள் அந்த அழைப்பை அசட்டை செய்துவிட்டு மாணவர்களைப் […]

சிரியாவில் நடந்த விஷ வாயு தாக்குதலில் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுத்தும் வேதிபொருள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதென உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது

சிரியாவில் நடந்த விஷ வாயு தாக்குதலில் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுத்தும் வேதிபொருள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதென உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் […]

மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க கோரியும் காங்கிரசார் இன்று தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க கோரியும் காங்கிரசார் இன்று தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் […]

அம்மாவின் சாதனைகளை சொல்லி நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஓட்டுவேட்டை

ஆர்.கே.நகர் தொகுதியில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். மறைந்த முதல்வர் அம்மாவின் சாதனை திட்டங்களை எடுத்து கூறிய அவர் அந்த திட்டங்கள் மட்டுமல்ல, மேலும் பல வளர்ச்சி பணிகளும் தொடர வேண்டுமானால் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பெண்கள், […]

சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ செங்சென்ங் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான நான்கு நாட்கள் பயணத்தை அவர் இன்று ஆரம்பிக்கவுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் பாகிஸ்தான் செனெட் தலைவர் மியான் ராசா ரப்பானி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். யூ செங்சென்ங், சீன மக்கள் அரசியல் […]

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த இறுதி உடன்பாடு செய்யப்படவில்லை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் இன்னமும் இறுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் அரசாங்கம் கடுமையான நிதி இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த இழப்புகள் ஈடு செய்யப்பட வேண்டும். சீன நிறுவனத்துடனான உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், இறுதி வரைவு […]

அமைச்சரவை முடிவுகள்

01.சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை விருத்தி செய்தல் (விடய இல. 10) இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச ஒப்புதல்களின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி மற்றும் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வேளையில் விபத்துக்கு உள்ளாகின்ற கப்பல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வேண்டி தேடல் மற்றும் மீட்டெடுக்கும் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அதனடிப்படையில், பல நவீன […]

தமிழர் அபிலாஷைகளை வென்றெடுக்க சர்வதேசம் துணை நிற்க வேண்டும்! – ஜேர்மனிய நாடாளுமன்றத் தலைவரிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

“தமிழ் மக்களின் அபிலாஷைகள் புதிய அரசமைப்பின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நீடித்து நிலைத்து நிற்கும் – எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவற்றை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகம் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும்.” – இவ்வாறு தன்னைச் சந்தித்த ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் தலைவரிடம் எடுத்துரைத்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். இலங்கை வந்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் […]