Other News

மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு நாளை முதல் வீடுகள் ; ஜனாதிபதி பணிப்புரை

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று (19) முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். மீத்தொட்டமுல்லை பிரதேசத்தில் இடர் வலையத்திலுள்ள மக்களை மீட்பதற்கு முன்னுரிமையளித்து […]

ஸ்ரீலங்கா, இந்தியாவிற்கு இடையில் பொருளாதார உடன்படிக்கை?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீலங்காவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின்போது, கூட்டு அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்தியாவின் த வயர் (The Wire) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் சுமையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கா சீனாவின் பிடியில் இருந்து விடுபடுவது கடினமானது என்பதால், இதனைச் சமநிலைப்படுத்தும் வகையில், திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா முன்வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் […]

கட்டடத்தை அகற்றுக; சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் கட்டடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரமாக அணிவகுத்து பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இருமாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அண்மையில் அடிக்கல் […]

நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம்; புகையிரத கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எந்தவொரு சலுகையுமின்றி தங்களை அடிமைகளாக, கட்டாயப்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் வேலை வாங்குவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகையிரத கடவை ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விடுமுறை எதுவுமின்றி நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளத்திற்காக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக தற்காலிகமாக புகையிரதக் கடவைக் காப்பாளர்களாக கடமை புரிவோரை நிரந்தர நியமனமாக்குமாறு கோரி, மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் […]

கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கூட்டம் ஆரம்பம்

இராணுவத்தினர் வசமுள்ள கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. எனினும் இந்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 50 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், […]

தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம்! – மட்டக்களப்பில் இன்று உணர்வெழுச்சி நிகழ்வு

நாட்டுப்பற்றாளர் – ஈகச்சுடர் – தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் பூபதி என்ற இயற்பெயருடன் வந்துதித்த அன்னை பூபதி, தமிழீழ மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவடைந்தார். தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே 19.03.1988 இல் இருந்து […]

மஹிந்தவின் ஊழல், மோசடிகள்: – 3 விசாரணை அறிக்கைகள் மைத்திரியிடம் இவ்வாரம் கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கைகள் மூன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடனும் அவரது குடும்பத்தினருடனும் நேரடியாகத் தொடர்புடையதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பான அறிக்கைகளே ஒப்படைக்கப்படவுள்ளன. மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு பல்வேறு மோசடிகள் […]

வாழ்வுக்கான போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே! – மனைவி, மகள், மருமகன், பேர்த்தியை இழந்து தவிக்கும் முதியவர்

“ஐயோ, எனது முழுக் குடும்பமுமே குப்பைமேட்டுக்குள் புதைந்து சிதைந்துபோயுள்ளது. பேரன் மட்டுமே உயிருடன் இருக்கின்றான். வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட எனது போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே…” – இவ்வாறு கண்ணீர்மல்க கருத்து வெளியிட்டுள்ளார் மீதொட்டமுல்ல குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளராகச் செயற்பட்ட என்.கீர்த்திரத்ன. மீதொட்டமுல்லயில் குப்பைகொட்ட வேண்டாமென முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை எல்லாம் இவரே தலைமையேற்று நடத்தியிருந்தார். இதனால், பொலிஸாரின் கொட்டன், பொல்லுத் தாக்குதல், கண்ணீர்ப் புகைகுண்டுத் தாக்குதல்ஆகியவற்றுக்குள் உள்ளாகியிருந்தார். எவ்வளவுதான் நெருக்கடிகள் […]

மீதொட்டமுல்லயில் தொடர்கிறது மீட்புப் பணி! – 31 சடலங்கள் இதுவரை மீட்பு

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. அத்துடன், அனர்த்ததால் ஏற்பட்ட சொத்து இழப்பீடு குறித்த மதிப்பீட்டு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. கள ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை மொத்தமாக 31 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 10 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 30 பேர் காணாமல்போயுள்ளனர் என முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த குறித்த நிலையில் அத்தொகை 10 ஆகக் […]

மீதொட்டமுல்ல அனர்த்தம்: ரணிலிடம் வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பாக இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவனும், வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் பு டொங்கும் தெரிவித்துள்ளனர். இந்த உணர்வுபூர்வமான சந்தர்ப்பத்தில் வியட்நாம் மக்களும், அரசும் தமது உள்ளங்களால் இலங்கையுடன் ஒன்றாக இணைந்திருப்பதாக வியட்நாம் ஜனாதிபதியும், கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று செவ்வாய்க்கிழமை […]