Other News

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு மலையகத்தில் அஞ்சலி

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு மலையகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா டயகம மேற்கு 5ஆம் பிரிவு தோட்ட மக்கள் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இவ் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குப்பைமேடு சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்கு வெகு விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்க […]

இலங்கை பிரஜைகள் என்றாவது எங்களை மதியுங்கள்; சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் ஆதங்கம்

மக்களுக்கு சேவை செய்வதாக பெருமிதம் வெளியிடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒருவரேனும் தங்களை வந்து பார்வையிடவில்லை என்று பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் ஆவேசம் வெளியிட்டுள்ளனர். மலையக வம்சாவளிகள் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் இலங்கை பிரஜைகள் என்ற காரணத்தினாலாவது தம்மை மனிதர்களாக மதியுங்கள் என்றும் இரந்து கோரியுள்ளனர். நிரந்தர காணி உரிமைப்பத்திரத்தை வழங்கினால் மாத்திரமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்ற எச்சரிக்கையுடன் சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று, 27 ஆவது நாளாகவும் […]

கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளைக் காப்பாற்றியோர் மீது தாக்குதல்

வவுனியா – ஓமந்தை, கொம்புவைத்தகுளம் பகுதியில் இரண்டு யானைக் குட்டிகள் உட்பட நான்கு யானைகள் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளன. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ளது. கொம்புவைத்தகுளம் பகுதியில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் கிடைக்கப்பெற்றது. இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் மாலை 4 மணி ஆனபின்னரும் வனவிலங்கு ஜீவராசிகள் […]

மீதொட்டமுல்ல அனர்த்தத்தின் எதிரொலி; நாடு திரும்புகிறார் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார். ஜப்பானிய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று வியட்நாமுக்கான பயணத்தை ஆரம்பித்தார். இந்த நிலையில் மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த விபத்தில், 26 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், பிரதமர் தமது பயணத்தை சுருக்கிக்கொண்டு […]

திபெத்திய புத்தமதத் துறவியொருவர் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்தார்

திபெத்திய புத்தமதத் துறவியொருவர் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்தார். இச் செய்தியை திபெத்தில் பணியாற்றும் கண்காணிப்புக் குழுவும், அமெரிக்க அரசு ஆதரவு பெற்ற வானொலியும் வெளியிட்டுள்ளன. அடையாளம் தெரியாத அந்த புத்தபிட்சு மேற்கு சிச்சுவான் மாகாணத்தின் கன்சி எனுமிடத்திலுள்ள பொதுச் சதுக்கத்தில் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீ அணைக்கப்பட்டு பிட்சுவை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். பிட்சு உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அப்பிரதேசத்தின் தன்னாட்சி அரசு […]

ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்துவைப்பு

ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆயரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படையினரால் கடந்த மாத இறுதி பகுதியில் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி அமைக்கப்படும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வடபகுதி கடற்படை கட்டளை தளபதி மற்றும் கடற்படை அதிகாரிகள் குருமார்கள் கலந்து கொண்டனர்.

மீதொட்டமுல்ல விபத்தில் பலியானோருக்கு ஒரு இலட்சம், பாதிக்கப்பட்டோருக்கு 25 இலட்சம்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வரை நட்டஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த விபத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – மீதொட்டமுல்ல குப்பை மேடு கடந்த 14ஆம் திகதி மாலை […]

வடகொரியா சவால்: அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார்

வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா. […]

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதனால் பதுளை, மாத்தறை, மதுகம, அதுருகிரிய, பலிஅத்த, உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். இயந்திரம் செயலிழந்தமைக்கான காணம் கண்டறியப்படாத நிலையில், செயலிழந்துள்ள இயந்திரத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையம் […]

சிவன் அறக்கட்டளை நிலைத்தின் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்பணம்

சிவன் அறக்கட்டளை நிலைத்தின் கல்வி மேம்பாட்டு பேரவை இன்றைய தினம் யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது கல்வி, விளையாட்டு, கலை ஆகிய துறைகளில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு மேற்படி கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டு பேரவையின் தலைவர் வடமாகாண ஓய்வுநிலை மாகாண கல்வி பணிப்பாளர் வ.செல்வராசா […]