Other News

பிரான்ஸ் தாக்குதலில் போலீசார் ஒருவர் மரணம்.

சற்றுமுன் பிரான்சில் சேம்ப்ஸ் எலிஸஸ்ல் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் போலீசார் ஒருவர் மரணம்அடைந்ததுடன் மற்றுமொரு போலீசார் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டு நடத்திய தாக்குதலாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.துப்பாக்கிச்சூடு நடந்த நகரை முழுமையாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறப்போகும் சமயத்தில் நடந்த இத்தாக்குதல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத் தாக்குதலைப்பற்றி மேலும் விபரங்கள் அறிய உங்கள் தமிழருவியின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

முஸ்லிம்களின் வாக்குகளால் சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவேன் – மஸ்தான் எம்.பி

முஸ்லிம்களின் வாக்குகளால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற மே தினம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களுடான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் 12 வீதமாக காணப்பட்டது. எனினும், தற்போது, 4 […]

இடைக்கால அறிக்கை இரண்டு வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்

அரசியல் யாப்பின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்னமும் இரண்டு வார காலங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் திருத்தங்களை மேற்கொள்வதா அல்லது அதனை அவ்வாறே அமல்படுத்துவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இன்றைய சந்திப்பின் போது, ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு உருவாக்க நடைமுறையானது, தற்போது […]

மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்குவதினால் சூழலுக்குப் பாதிப்பு இல்லை: கலாநிதி கே.அருளானந்தம்

யாழ். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தினால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என நாறா நிறுவனத்தின் சமுத்திரவியல்துறை தலைவர் கலாநிதி கே.அருளானந்தம் தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தினால் சூழல் பாதிப்பு ஏற்படும் என நாறா நிறுவன ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி மேற்படி திட்டத்தை உடனடியாக நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது […]

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து எவரும் கண்டுகொள்வதில்லை : உறவினர்கள் கவலை

காணிப்பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்வதில்லையென உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறும் அவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப் போராட்டங்கள் இரு மாதங்களை எட்டவுள்ள நிலையில், அரசாங்க அதிகாரிகள் […]

வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசு செவிமடுக்க வேண்டும்: வியாழேந்திரன்

தமது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார காணிகளுக்காக வீதியில் போராடிவரும் வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின்னரான மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில், அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். […]

கூட்டமைப்பை சிதைக்கும் எண்ணமில்லை: அனந்தி சசிதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்றும் வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த […]

அரசாங்கம் இணங்கினால் மக்களது காணிகளிலிருந்து வெளியேற தயார்: இராணுவம்

இடமாற்றத்திற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், மக்களது காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற தயார் என இராணுவத்தினர் உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள பொதுமக்களது காணிகள் குறித்து ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கும் படையினருக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செலயகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து […]

கிளிநொச்சியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு

கிளிநொச்சி பளை பொலிஸாரால் 6 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடற்படையினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து நேற்று (புதன்கிழமை) மேற்கொண்ட தேடுதலின்போது கஞ்சா போதைப்பொருளும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இத் தேடுதல் நடவடிக்கையின் போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கேரள கஞ்சாவை பருத்தித்துறை […]

பேருந்தின் சில்லில் சிக்குண்டு பெண் பரிதாபமாக உயிரிழப்பு: சாமிமலையில் சம்பவம்

பேருந்தின் சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று மஸ்கெலியா, சாமிமலை கவரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியாவிலிருந்து சாமிமலை நோக்கி இன்று (வியாழக்கிழமை) பயணித்த தனியார் பேருந்திலிருந்து, குறித்த பெண் இறங்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் கற்களை வீசி பேருந்தை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்ட போதிலும், பொலிஸாரின் தலையீட்டினால் பதற்றம் தணிந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி […]