Other News

காணாமல்போனார் அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும்! – ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்கிறார் சுமந்திரன்

காணாமல்போனார் அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டுபிடித்து தருமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே காணாமல்போனோரின் உறவுகள் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் […]

வாட்டி வதைக்கிறது வறட்சி! – 7 இலட்சம் பேர் பாதிப்பு

வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி காரணமாக 6 இலட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 96 ஆயிரம் குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. வறட்சி காரணமாக வடக்கு மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலையங்களும் வற்றிப் […]

பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லை – கோட்டாபய ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென வெளியான செய்தி உண்மையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் குறித்து பலவாறான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ள கோட்டா, அதன் காரணமாகவே அவர் உயிருடன் உள்ளாரென தெரிவிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். […]

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனஈர்ப்பு போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்கிழமை) தொடர்கிறது. மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து சுமார் 27 வருடங்களாக பன்னங்கண்டி பகுதியில் வாழ்ந்து வரும் மக்களே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சிவா பசுபதி கிராம மக்களுக்கு காணிகளை வழங்குவதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது தமக்கும் தீர்வு வேண்டுமென கோரி சரஸ்வதி கிராம மக்கள் மற்றும் ஜொனி குடியிருப்பு மக்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தாம் […]

பொத்துவில் – பானம பகுதியில் படகு சவாரியில் ஈடுபட்ட இளைஞன் விபத்துக்குள்ளாகி மரணம்

அம்பாறை பொத்துவில் – பானம பகுதியில் உள்ள ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாகவும் உயிரிழந்தவர் பானம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் சேர்ந்து குறித்த பகுதியில் உள்ள ஆற்றில் இளைஞர்கள் சிலர் படகு போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, படகு ஒன்று சமநிலை இழந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த […]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். புல்மோட்டை கொடுவகட்டுமலை கடற்பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, மூன்று படகுகளையும் தடை செய்யப்பட்ட வலைகளையும் 350 கிலோ நிறை கொண்ட மீன்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மீட்கப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்களையும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துக; அரசாங்கத்திடம் கோரிக்கை

ஸ்ரீலங்காவில் பல்வேறு பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த வைரஸ் தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு […]

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் திருட்டு

வவுனியா – தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோயிலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் உண்டியல் உடைத்து பெருமளவு பணம் மற்றும் ஒலிபெருக்கியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா – தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மூடிவிட்டு சென்ற நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று காலை பூசாரிஇ பூஜைகளை மேற்கொள்வதற்காக கோயிலுக்கு […]

புத்தளம் சாலியவெவ பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

புத்தளம் சாலியவெவ பிரதேசத்தில் தலையற்ற மனித எச்சங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து எம்.பி 20 ரக ரிவோல்டர் ஒன்றையும் சாலியவெவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த மனித எச்சங்கள் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் சேர்த்து கடந்த 4ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வாக்குமூலம் […]

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டங்கள் – இரா. சம்பந்தன் அறிவிப்பு

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் 19ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் விசேட கூட்டங்கள் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கடசித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டங்களை யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தற்போதைய நிலையில் நடத்த […]