வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்திய […]
Other News
தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசுகின்றன : அதனை உடனடியாக தடுக்க வேண்டும் : கருணா குற்றச்சாட்டு
தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை குழப்ப முயற்சிப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் இனவாத கட்சிகளை விரட்டியடிக்கவே தாம் புதிய கட்சியை ஆரம்பித்ததாகவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் […]
சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்கின்றது: கஜேந்திரன்
கல்வித் துறையில் சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்வதாகவும் வடக்கு – கிழக்கு அரச நிர்வாகங்களிலே சிங்கள மேலாதிக்கம் வளர்ந்து செல்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் […]
செட்டிகுளம் மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்
வவுனியா – செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நித்தியானந்தம் என்பவர், ஏற்கனவே பதவி வகித்த பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக குறித்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி […]
இடைநிறுத்தப்பட்ட ஏறாவூர் நகரசபை அலுவலர்களுக்கு மீள் நியமனம்
ஏறாவூர் நகர சபையில் பணியாற்றிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த 73 ஊழியர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் மேற்கொண்ட நேர்முகத் தேர்வின் பின்னர், குறித்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் மற்றும் பதிலீட்டு அடிப்படையில் குறித்த மீள்நியமனங்கள் நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனால், ஏறாவூர் நகரசபையில் உள்ள வெற்றிடங்கள் […]
சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றியது நல்லாட்சியே: ஜனாதிபதி
நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டமையால்தான் சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நாடாக இலங்கையை மாற்றினோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி-கெட்டம்பே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, எத்தகைய சூழ்ச்சிகள் மற்றும் சவால்கள் வந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும், சுதந்திரக் கட்சி வெளிப்படையான […]
‘சூழல் புனிதமானது’ நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் கண்டியில் ஆரம்பம்!
சர்வதேச வெசாக் விழாவினை முன்னிட்டு ‘சூழல் புனிதமானது’ என்ற நிகழ்ச்சித்திட்டம் கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட மேற்படி திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாக கெட்டம்பே விளையாட்டு மைதானம் சுத்திகரிக்கப்பட்டது. ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார். அமைச்சர்களான மஹிந்த அமரவீர, எஸ்.பீ. திஸாநாயக்க, பிரதி அமைச்சர் […]
துருக்கியில் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
ராணுவ புரட்சிக்கு உதவியதாக கூறி துருக்கியில் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ புரட்சி நடந்தது. அதை அதிபர் ரீசெப் தய்யிப் எர்டோகன் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார். அமெரிக்காவில் தங்கியிருக்கும் மதகுரு பதுல்லா குலென் தூண்டுதலின் பேரில் புரட்சி நடந்ததாக தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து ராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மீது அதிபர் எர்டோகன் நடவடிக்கை மேற்கொண்டு […]
கிம் ஜொங் உன் புத்திசாலியானவர்: ட்ரம்ப்
வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ஒரு புத்திசாலி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், கிம் ஜொங் உன் மிக இளவயதிலேயே பாரிய பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளதாகவும் ஏனைய தலைவர்களுடன் சரிசமமாக போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், […]
அபிவிருத்தியை நிறுத்த மஹிந்த முயன்றால் சும்மா இருக்க மாட்டோம் – ரணில் எச்சரிக்கை
அபிவிருத்தியை நிறுத்த மஹிந்த முயன்றால் சும்மா இருக்க மாட்டோம்என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பொரள்ளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் ஆட்சிமாற்றம் பின்னர் நாட்டின் வேலையின்னை மற்றும் கடன் சுமையில் இருந்து விடுப்பட ஒரு செயற்றிட்டத்தை அமைக்க ஒரு வருட காலத்தை கோரினோம். காரணம் முன்னாள் […]





