சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்கின்றது: கஜேந்திரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கல்வித் துறையில் சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்வதாகவும் வடக்கு – கிழக்கு அரச நிர்வாகங்களிலே சிங்கள மேலாதிக்கம் வளர்ந்து செல்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனை அற்ற ஆதரவின் ஊடாகவே, சர்வதேசத்திடம் இருந்து இலங்கை காப்பாற்றப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் ஊடாக போர்க் குற்றவாளிகளை இலங்கை அரசு சர்வதேசத்திடம் இருந்து காப்பாற்றியுள்ளது என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், படிப்படியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என வெறும் பொய் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றது என கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *