அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள் என்று அமைச்சர்களைக் கடிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயலணி நிறுவப்படும் முடிவில் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட சரத் பொன்சேகா விவகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. “அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்போது மக்களுக்கான அத்தியாவசிய சேவையை […]
Other News
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ள மஹிந்த அணி முடிவு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்கு மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது. “பொது எதிரணி எம்.பிக்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது திகதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான ரஞ்சித் டி சொய்சா தெரிவித்தார். உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளபோதிலும் அவற்றுக்கான […]
இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு! – கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் காட்டம்
“ஊடக சுதந்திரத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தலையிடும் ஓர் அவல நிலை இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன். ‘”இந்தியத்துணைதூதரகம் மிக மோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கு எதிரானதாக எந்தக் கருத்தும் எமது பத்திரிகையில் வரக்கூடாது என்பதை நிலைநிறுத்தி அவர்கள் செயற்படுகிறார்கள். தமது தூதரகத்திற்குச் செல்பவர்களிடம் […]
ஒருபோதும் திரும்பப் பெறமுடியாத பகிரப்பட்ட அதிகாரங்களே தேவை! – சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு
மத்திய அரசால் ஒருபோதும் திரும்பப் பெறப்பட முடியாத அளவுக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தைத்தான் நாம் தீர்வாகக் கேட்கின்றோம் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம். ‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ பத்திரிகைப் பணியாளர்கள் படுகொலை மற்றும் ஊடக நிறுவனம் மீதான தாக்குல் நடத்தப்பட்டதன் 11ஆவது ஆண்டு நினைவாக நேற்று நடத்தப்பட்ட ‘வேட்கை’ எனும் ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ‘புதிய […]
ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!
ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை நிகழ்ந்த 11ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்றாகும். ‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகளினால், ஊழியர்கள் இருவர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான நேற்று ஊடக சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. 2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள […]
ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் முரண்படும் விதத்தில் பிரித்தானியா நடந்துகொள்ளாது!
பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது விளக்கம் அளிக்கும் விடயத்தில், ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் முரண்படும் விதத்தில் பிரித்தானியா நடந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஜேன் கிளாட் ஜங்கர் மற்றும் பிரித்தானிய பிரதமர் மே ஆகியோருக்கு இடையில் பிரெக்சிற் தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியளிக்கும் வகையில் இருக்கவில்லை என, ஜேர்மனிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே மேற்குறித்தவாறு டோரிக்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றியத்தால் வெளியிடப்படும் பிரெக்சிற் விதிமுறைகளை பிரித்தானியா […]
ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு கூட்டு எதிரணி நன்றி
கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்திற்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு அந்த கட்சி நன்றி தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மே தின கூட்டம் தொடர்பில் இன்று கூட்டு எதிரணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டார். கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்ட இந்த கூட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கி இருந்ததாகவும் குறிப்பாக பொலிஸார் எந்த தயக்கமும் […]
5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
சைட்டம் தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அரசின் பிரதான ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளன.
உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன்: அதிபர் டிரம்ப்
உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளும், அணு ஆயுத சோதனைகளும் நடத்தி வருகிறது. அமெரிக்க பகுதியை குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் நடத்தியது. இருந்தும் எந்நேரமும் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என வட கொரியா எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடும் […]
தனியார் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்க உளவு செயற்கை கோள்
தனியார் நிறுவன ராக்கெட் மூலம் முதன் முறையாக உளவு செயற்கை கோளை தற்போது தான் அமெரிக்கா முதன் முறையாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க ராணுவம் ‘என்.ஆர்.ஓ.எஸ்.-76’ என்ற உளவு செயற்கை கோள் தயாரித்துள்ளது. அது நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இந்த நிறுவனம் கோடீசுவரர் லொன் […]





