சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றியது நல்லாட்சியே: ஜனாதிபதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டமையால்தான் சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நாடாக இலங்கையை மாற்றினோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி-கெட்டம்பே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, எத்தகைய சூழ்ச்சிகள் மற்றும் சவால்கள் வந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும், சுதந்திரக் கட்சி வெளிப்படையான கட்சி என்றும் கூறினார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கருத்துக்களை வெளியிடவும் யோசனைகளை முன்வைக்கவும் கலந்துரையாடும் உரிமையும் சகலருக்கும் உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு இனம் பற்றி மட்டும் சிந்தித்து, மற்றொரு இனத்தை அடிமைப்படுத்தி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *