Other News

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது தவறி விழுந்து மலையேறும் வீரர் பலி

நேபாளத்தில் நேற்று காலை நப்ட்ஸ் பகுதி வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் தவறிவிழுந்து பலியானார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் யுயெலி ஸ்டெக் (40). நேற்று காலை இவர் நேபாளத்தில் உள்ள நப்ட்ஸ் பகுதி வழியாக இமய மலையின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அப்போது அவரது கை தவறிவிட்டது. இதனால் அவர் மிக ஆழமான பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவர் அதே […]

விரைவில் அணு குண்டு சோதனை – அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறிய வகையில் விரைவில் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக வட கொரியா மிரட்டியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து […]

தமிழ் மக்களின் உரிமைகளை மையப்படுத்தி கிழக்கில் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு

‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ள நிலையில், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்போது, வடக்கு- கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும், அப்பாவி விவசாயிகளின் காணி ஆக்கிரமிப்பை […]

ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு திருப்புமுனையில் சென்றுகொண்டிருக்கின்றது: சுமந்திரன்

தற்போதைய ஆட்சியில் சாதகமான பல முன்னேற்றங்கள் நடைபெற்று, ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40ஆவது நினைவுதின நிகழ்வில், ‘ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றியபோது- ”எல்லோரும் எங்களைக் […]

மக்களின் இருப்பு கேள்விக்குறியானால் பதவி விலகுவேன்: கோடீஸ்வரன்

“அம்பாறை மாவட்ட மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுமாயின், நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்” என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “நல்லாட்சியை உருவாக்கிய தமிழ் மக்களுக்கான உரிமை இன்றும் கிடைக்காது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு- […]

தொழிலாளர் தினத்தை கொண்டாட அருகதையற்று தெருவில் நிற்கின்றோம்: கேப்பாப்பிலவு மக்கள்

“அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகின்ற நிலையில், தொழிலாளர்களாகிய நாம் இத்தினத்தை கொண்டாட முடியாது நடுத்தெருவில் நிற்கின்றோம்” என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்கள், மே தினமான இன்று (திங்கட்கிழமை) தொழில் உபகரணங்களை வீதியில் வைத்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அதில் கலந்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்களைச் […]

போராட்டங்களுக்கு தீர்வாக மே தினம் அமையவேண்டும்: சம்பந்தன்

”தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும், தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவுகூருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த […]

தமிழ் அரசியல் கைதி தாக்கப்பட்டமைக்கு விசாரணை கோரல்

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டமை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென, காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, தாக்குதலை மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, சிறைச்சாலைகள் அத்தியட்சகரிடம் காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் மனுவொன்றையும் கையளித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான தற்கொலைத் தாக்குதல் […]

தமிழர்களை மீண்டும் ஆயுதமேந்த வைக்க முயற்சிக்கிறதா இந்த அரசு? – சிறிதரன்

மக்களுடைய கண்ணீருக்கும், வலிகளுக்கும் விடை கூற தவறிவரும் இந்த அரசாங்கம், தமிழர்களை மீண்டுமொரு யுத்தம் நோக்கிய பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கிறதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தொழிலாளர்களாக இருந்து அந்தந்த குடும்பங்களை வழிநடத்தி பாதுகாக்க […]

மஹிந்தவின் உறவினர்கள் மைத்திரியுடன் இரகசியம்! – அரசியல் அரங்கில் வெகுவிரைவில் அதிரடி மாற்றங்கள் என்கிறார் எஸ்.பி.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியமாகப் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இதனால் அரசியல் அரங்கில் வெகுவிரைவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் […]