Other News

திங்கட்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் :அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை 22 ஆம் திகதி அரைநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டத்தைக் […]

ஜப்பான் இளவரசிக்கு திருமணம் – காதலரை கரம் பிடிக்கிறார்

ஜப்பான் இளவரசி மேக்கோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாகப் படித்த காதலரை கரம் பிடிக்கிறார். ஜப்பான் இளவரசி மேக்கோ (வயது 25). இவர் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ-மிச்சிகோ தம்பதியரின் இளைய மகன் இளவரசர் அகிஷினோ- கிகோ தம்பதியரின் மகள் ஆவார். டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். இங்கிலாந்து சென்று லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான […]

வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை

வடகொரியா எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை சியோல்: வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை […]

அமெரிக்க மக்களிடம் ரஷிய எதிர்ப்பு உணர்வை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்: புதின் குற்றச்சாட்டு

சமீப காலமாக அமெரிக்க மக்களிடம் ரஷியாவுக்கு எதிரான மனபோக்கை உருவாக்க சிலர் திட்டமிட்டு முயற்சித்து வருகிறார்கள் என அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தார். அவர் அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது டொனால்டு டிரம்ப் பல்வேறு ரகசியங்களை ரஷிய மந்திரியிடம் கூறியதாகவும், குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ரகசியங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அமெரிக்க […]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கிளிநொச்சியில் தனி சிங்கள கொடி!

கிளிநொச்சி நகரில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும் தமிழ் சமூகத்தை கொந்தளிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த […]

இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இவ்வருடம்!

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இவ்வருடத்தினுள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியான் தெரிவித்துள்ளார். ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ திட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் ரணிலை பீஜிங் நகரில் சந்தித்து கலந்துரையாடியபோதே சீன பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து, நிதி, வணிகம் போன்ற துறைகளை அடிப்படையாகக்கொண்டு, இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை முன்னேற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை இலங்கைக்கு […]

தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது: சரத் பொன்சேகா

இறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து கேட்டபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த சரத்பொன்சேகா யுத்தத்தின் […]

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்: பொதுச்சுடர் ஏற்றி அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் […]

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றி வைத்து, அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மலர் தூவியும் ஈகைச் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர். […]

இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது : ஜனாதிபதி திட்டவட்டம்

இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள், சட்டமா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குறித்த சந்திப்பில் காணாமல் போனோர் தொடர்பாகவும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும், […]