Other News

ஈழத்தில் செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துக்க நாள் இன்று! – தரணியெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்; பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில்

ஈழத் தமிழர் வாழ்நாளில் இன்று கறுப்பு நாள்; செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாள்; மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாள்; முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலிசெய்யும் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபடும் நாள். தமிழ் இனத்தின் மீது அரசாலும் அதன் படைகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய மிக மோசமான படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நாள் இன்று. இறுதிக்கட்டப் […]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் ஓரணியாக நாளை சுடரேற்றுவோம்! – சம்பந்தன் அழைப்பு

“தமிழ் மக்கள் அனைவரும் நாளைய தினம் ஓரணியில் நின்று, அரச படைகளால் முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட எமது உறவுகளை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுகூரவேண்டும்.” – இவ்வாறு கேட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஈழத்தில் அரச படைகளால் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட மிகப்பெரும் படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது. […]

இலங்கை பல்லின மக்களும் வாழும் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்தே வந்தனர்! – மகாவம்சக் கதை கூறி ஞானசார தேரருக்கு மனோ பதிலடி

“சிங்களவர்களும் இந்தியாவிலிருந்தே வந்தனர் என்று நீங்கள் கூறும் அதே மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையானது பல்லின மக்களும் வாழும் நாடாகும். இங்கு தமிழ்மொழியும் அரச கரும மொழியாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு எடுத்துரைத்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன். பொதுபலசேனா அமைப்பு தலைமையிலான கடும்போக்குடைய சிங்கள, பௌத்த தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய […]

இலங்கை சிங்கள பௌத்த நாடு! அனைவரும் இதை ஏற்கவேண்டும்!! – இல்லையேல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்கிறார் ஞானசார தேரர்

“இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு. இதை அனைவரும் ஏற்றாகவேண்டும். எனவே, வந்தேறுக்குடிகளான தமிழ், முஸ்லிம் மக்கள் எமது (பௌத்தர்களின்) கலாசாரம், மொழியைக் கற்கவேண்டும். அப்போதே நல்லிணக்கம் சாத்தியமாகும்.” – இவ்வாறு தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனிடம் கடுந்தொனியில் எடுத்துரைத்தார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனை சந்தித்துப் […]

இனப்படுகொலையின் சாட்சியாக இன்றும் பல தடயங்கள் முள்ளிவாய்க்காலில்!

அரச படைகளின் இனவெறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் காவுகொள்ளப்பட்ட முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் தடயங்களை இப்போதும் காணமுடிகின்றது. விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் காலப் பகுதியில் இராணுவத்தின் பிடியில் இருந்து தமது உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகப் பல இடம்பெயர்வுகளைச் சந்தித்த தமிழ் மக்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதியை வந்தடைந்தனர். மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறிய நிலப் பரப்புக்குள் அடக்கப்பட்டவேளை இராணுவம் ஏவிய எறிகணைகளால் தினமும் வகைதொகையற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன. […]

யாழில் படுகொலைகளுக்கு நீதி வேண்டிபல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் எனவும், வழக்கை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனவும் கோரிய பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம், கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முற்பகல் 11.30 […]

வடமேல் மாகாண சபையிலும் பிரளயம் ஏற்படும் அறிகுறி! – பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணிக்குத் தாவ முயற்சி

வடமேல் மாகாண சபையிலும் ஆட்சி மாற்றமொன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன எனவும், அச்சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியின் பக்கம் சாயவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அச்சபையின் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சராகவிருந்த டி.பி.ஹேரத் பண்டாவின் பதவி பறிக்கப்பட்டு லக்ஷ்மன் வெண்டருவவுக்கு வழங்கப்பட்டது. அன்றுமுதல் சபை உறுப்பினர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி இன்று […]

சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம

இராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சிறிலங்கா அனுமதி அளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பீஜிங்கில் இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். சீன நீர்மூழ்கியை கொழும்பில் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி வழங்க மறுத்தது என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர் சரத் அமுனுகம, “எமது துறைமுகங்கள் […]

அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச தயார்

அணுஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார். அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் நேற்று கூடிய ஐ.நா.சபை கூட்டத்திலும் வட்கொரியாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வடகொரியா மீது அமெரிக்கா […]

இந்தியா – பாக். இடையேயான பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ஐ.நா செய்தித் தொடர்பாளர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது குல்புதீன் ஜாதவ் மரண தண்டனை, எல்லை தாண்டிய தாக்குதல், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சாலை அமைத்தல் போன்ற விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. சர்வதேச அரங்கில் மாறி மாறி இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் […]