மட்டு. மாவட்டத்தில் குடியரசு தின நிகழ்வுகள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையின் 45வது குடியரசுதின தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைபவம், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

மாவட்ட செயலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு அதன் பின்னர், உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கணக்காளர் எஸ்.நேசராஜா மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *