“அச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற தமிழ் மக்களுள் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விரும்பம்கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் வரவேண்டுமானால் நாட்டில் அமைதியானதும், வன்முறையற்றதுமான சூழலொன்று ஏற்படுத்தப்படவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் […]
Other News
குப்பையுடன் மனித உடல் அவயங்களும் கொட்டப்படுவதால் நாடாளுமன்றில் சர்ச்சை
குப்பைகளுடன் மனித உடல் அவயங்களும் முத்துராஜவெலயில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா நேற்று நிராகரித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் நிலையியல் கட்டளையின் 23/2 இன்கீழ் குப்பைப் பிரச்சினை தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுத்த தினேஷ் குணவர்தன எம்.பி., “கழிவுகள் வீதிகளில் கொட்டப்பட்டுள்ளன. அவை அகற்றப்படவில்லை. இதனால் […]
பல்டி அடித்தது வைத்தியர் சங்கம்! கைவிடப்பட்டது பணிப்பகிஷ்கரிப்பு!!
நாடுதழுவிய ரீதியில் இன்றுமுதல் தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் நேற்றுக் கொழும்பில் ஏற்பாடுசெய்யப்படிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:- “சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்தின் ஒருபகுதியாக நாளை (இன்று) முதல் மேற்கொள்ளப்படவிருந்த நாடுதழுவிய […]
புதிய அரசமைப்பு: அஸ்கிரிய பீடத்தின் எதிர்ப்பானது தமிழர் மீதான பல்குழல் தாக்குதல்! – சபையில் சிறிதரன் எம்.பி. சீற்றம்
“புதிய அரசமைப்புக்கு அஸ்கிரிய பீடம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இது தமிழர் மீதான பல்குழல் தாக்குதலாகும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் அங்கு வலுக்கட்டாயமாக […]
இலங்கையைக் காப்பாற்ற மைத்திரி அரசை உடன் கவிழ்த்தே ஆகவேண்டும்! – வலியுறுத்துகின்றார் விமல்
“புதிய அரசமைப்பின் ஊடாக சமஷ்டி கொடுக்கப்படுவதற்கு முன் எட்கா ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் தாமதிக்காமல் உடனே மைத்திரி அரசைக் கவிழ்க்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடான இலங்கையைக் காப்பாற்ற முடியாது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எமது நாட்டிலுள்ள தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறுபான்மை இன மக்கள் மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் […]
தேசிய அரசுடன் மஹிந்த இணைந்தால் நல்லதாம்! – அமைச்சர் வசந்த
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேசிய அரசுடன் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாட்டைத் துரிதமாக முன்னேற்றிவிடலாமே.” – இவ்வாறு ஆசைப்படுகின்றார் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இந்தத் தேசிய அரசில் அனைவரும் இணைந்து இந்த நாட்டின் அபிவிருத்திக்காக வேலை செய்யவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தகூட எம்முடன் இணையவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். மைத்திரி அணி, […]
மஹிந்தவுடன் கூட்டமைப்பு பேசியிருந்தால் தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைத்திருக்கும்!
“மஹிந்தவுக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தபோது சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவுடன் பேசியிருந்தால் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்கும். அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை போலியாக அணுகியதால்தான் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய கூட்டமைப்பின் ஊடாக நாம் தமிழ், […]
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும்: சிரியா எச்சரிக்கை
சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு, 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது. […]
அடங்காத வடகொரியா: நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை
ஜி-20 நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி அடிக்கடி ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசோதனை செய்யும் வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை […]
ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா: போர்க்கலை நிபுணர்கள் கணிப்பு
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா இருப்பதாக, ஜப்பானைச் சேர்ந்த போர்க்கலை நிபுணர்கள் கணித்துள்ளனர். உலக நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி அடிக்கடி ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசோதனை செய்யும் வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஹ்வாசாங்-14 […]





