Other News

தூதரக உறவு தடையை நீக்க கத்தாருக்கு 48 மணி நேர ‘கெடு’ நீட்டிப்பு: சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவிப்பு

தூதரக உறவுக்கான தடையை நீக்க கத்தாருக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் 48 மணி நேரம் ‘கெடு’ விதித்துள்ளன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் (ஜூன்) 5 -ந் தேதி முதல் முறித்துக்கொண்டன. தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், தங்களது எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி இந்த தடை விதிக்கப்பட்டது. […]

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர். தெற்கு பிரான்சில் அவிக்னான் பகுதி உள்ளது. அங்கு அர்ராமா என்ற மசூதி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் மசூதியில் இருந்து பலர் வெளியே வந்த கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் […]

சர்வதேச நீதிபதிகள் இலங்கை வருவது உறுதி! – கூறுகின்றார் மஹிந்த

“நாட்டை இரண்டாகப் பிரிக்கும் புதிய அரசமைப்பும், படையினரைத் தண்டிக்கும் சர்வதேச நீதிபதிகள் குழுவும் வரப்போவது உறுதி” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த எமது நாடு இன்று பயங்கரமான ஒரு நிலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் சதி வலைக்குள் சிக்கி நாடு இப்போது சீரழிந்துகொண்டிருக்கின்றது. நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. புதிய அரசமைப்பு நாட்டை இரண்டாகப் […]

வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தனிநாட்டை அமைப்பதற்குத் திட்டம்! – மஹிந்த அணி எம்.பி. விமல் குற்றச்சாட்டு

தனிநாட்டுக்கான அடித்தளத்தை இடுவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோருகின்றன என்றும், அரசமைப்பில் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கண்டி தபாலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ‘சல்லாபிக்கும் அரசும் துஷ்பிரயோகிக்கப்படும் இலங்கை மாதாவும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “போரை […]

கிழக்கு மண்ணில் தமிழர் ஆட்சி உதயமாக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்! – கருணா அம்மான் அறிவிப்பு

“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள தமது கட்சி, தமிழ் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுப்பதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றது” என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா அம்மான் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒக்டோபர் முதல் வாரத்தில் விடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், ஆட்சிமாற்றத்தின் […]

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க அதாவுல்லா, ஹசனலி, பசீர் பேச்சு! – தலைமைத்துவ சபையின் கீழ் ஒன்றுபட இணக்கம்

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நம்பிக்கைக்குரியவருமான எம்.ரி.ஹசனலி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் […]

கிழக்கின் புதிய ஆளுநராக அதாவுல்லா?

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலராக கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து அவரது செயலாளராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்தே, இந்தப் பதவியை ஒஸ்ரின் பெர்னாண்டோ […]

30 வருடப் போரை விட இனவாதமே கொடியது! – அமைச்சர் சந்திம வீரக்கொடி எச்சரிக்கை

“போரால் இந்த நாடு 30 வருடங்கள் மாத்திரம்தான் துன்பத்தை அனுபவித்தது. ஆனால், இனவாதத்தைத் தூண்டினால் 100 வருடங்கள் துன்பத்தை அனுபவிக்கவேண்டிவரும். பிறக்கப்போகும் குழந்தைகளைக்கூட இந்த ஆபத்து விட்டுவைக்காது.” – இவ்வாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “போர் காரணமாக நாம் உயிர்களை மாத்திரம் இழக்கவில்லை. பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்தோம். இனங்களிடையே நல்லுறவை இழந்தோம். அந்தப் போரை 30 வருடங்களுக்குப் பின் மிகவும் […]

மைத்திரி – ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி! – திருமலையில் இன்று ஆர்ப்பாட்டம்

சீனன்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்த்தும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர். “இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்வதற்கு அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்களும் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, மேற்படி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசுக்கு பல வழிகளிலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படும்” […]

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமா? – நீதியமைச்சர் கருத்து

நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கத்தினதும் நாட்டினதும் பாதுகாப்பிற்கு பாதகமான சட்டம் ஒருபோதும் அமுல்படுத்தப்பட மாட்டாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அமைச்சர், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவதற்கான முன்னெடுப்புக்கள் உத்தேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், […]